அரசியல் உள்நாட்டு செய்திகள்

பிக்குகள் அமைதியாகவும் கவனமாகவும் வேலை செய்தனர்

Written by Administrator

கோதாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக பௌத்த பிக்குகள் அமைதியாகவும் கவனமாகவும் வேலை செய்தனர். ஜனாதிபதி ராஜபக்ஷ எளிமையான, நேர்த்தியான, சிறந்த வாழ்க்கைப் போக்கை உடையவர். அவரால் நாட்டுக்கு மகத்தான பணிகளைப் புரிய முடியும். அனைத்து இனங்களுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக் கூடிய சக்தி அவருக்குக் கிட்ட வேண்டும் என மல்வத்த பீடத்தின் அநுநாயக்க தேரர் நியங்கொட விஜிதசிரி தேரர் தெரிவித்தார்.

தலதா மாளிகைக்கு ஜனாதிபதி கோதாபய விஜயம் செய்த பின்னர் அவர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் நான்கு வகையான குணவியல்புகள் காணப்படுகின்றன. வீரம், திறமை, நாவன்மை, மனோவலிமைகளைப் பெற்றவர் அவர். அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் ஊடாக தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களின் அபிலாஷைககள் நிறைவேறியிருக்கின்றன என்றும் தெரவித்தார்.

About the author

Administrator

Leave a Comment