அரசியல் உள்நாட்டு செய்திகள்

குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜனாதிபதியாக வந்துவிட்டார் என்பதற்காக அழுத்தங்களை விடப்போவதில்லை

Written by Administrator

சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் பெற்றவர்கள் என்ற நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பதானது, அவருக்கு ஒரு இழுக்கான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.  

தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ அறிந்திருப்பது நல்லதொரு விடயம் எனவும், அதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்க வேண்டும் எனவும்  இந்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதனை தீர்த்துக்கொள்ள உடன் முன்வர வேண்டும் எனவும் அவ்வாறாயின், பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்ற ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தாம் தயாராகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..

 தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமே கலந்துரையாட வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிடும் சுமந்திரன், அரசியல் தீர்வை வழங்கும் பொறுப்பு மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளதாக கூறப்பட்ட போதிலும், தான் அவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பங்களில் அவர்கள் வெவ்வேறு விடயங்களை வெளியிட்டாரே தவிர, அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழர்கள் தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தெளிவான தன்மை இருந்ததாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தெளிவான தன்மை இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமையினால், இந்தியாவின் ஈடுபாடு தொடர்ந்தும் காணப்படும். இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ நன்கறிவார். இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் முதலில் வாழ்த்து சொல்வது இந்தியா எனவும், இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதியும் இந்தியாவிற்கே முதலில் பயணம் செய்வார் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபடும் போது, தேர்தல் முடிவுகளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் இல்லை என்பதை காட்டுகின்றது எனவும், தமிழர் பிரச்சினைக்கான தீர்வை செய்ய வேண்டும் என இந்திய பிரதமர், கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவார் எனவும் அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், இதுவே காலம்

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் தொடர்ந்தும் வழங்கப்படும். மஹிந்த ராஜபக்ஷ 2009 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த சந்தர்ப்பத்திலும் தாம் வலுவான அழுத்தங்களை கொடுத்ததாக கூறிய அவர், அந்த சந்தர்ப்பத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதியாக வந்துவிட்டார் என்பதற்காக, தாம் வழங்கும் அழுத்தங்களை விடப்போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 உறுப்பினர்களை பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்குமானால், வரவுள்ள ஆட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக தாம் மாற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். இவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால், தமது இலக்கை நோக்கி இலகுவாக நகர முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

About the author

Administrator

Leave a Comment