அரசியல் உள்நாட்டு செய்திகள்

சிந்தனைப் பயங்கரவாதம் கவனமாகக் கையாளப்பட வேண்டும்

Written by Administrator

சிந்தனைப் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், இராணுவப் பாதுகாப்பு வழங்குவதற்கும் சிந்தனாரீதியிலான எதிர்நடவடிக்கைக்கும் இடையில் சமநிலை பேணி நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டகொட தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் பிரியாவிடை நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாத முறியடிப்பு மற்றும் வன்முறைத் தீவிரவாதங்களை எதிர்கொள்வதற்காக வெளிநாடுகளின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சிரேஷ்ட அலுவலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இலங்கை இராணுவத்திலிருந்து ஒரு குழுவினர் இது தொடர்பில் ஆராய்ந்து வழங்கிய முன்மொழிவுகளில், எல்லா வகையான மதத் தீவிரவாதத்தையும் வன்மத் தீவிரவாதத்தையும் எதிர்கொள்வதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.

மதத் தீவிரவாதத்தையும் வன்மத் தீவிரவாதத்தையும் இல்லாதொழிப்பதற்கான தேசிய செயல்திட்டமொன்று வரையப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

About the author

Administrator

Leave a Comment