அரசியல் உள்நாட்டு செய்திகள்

சஜித் அணியிடமிருந்து புதிய கட்சி

Written by Administrator

ஆக்கபர்வமான சீரமைப்புக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நடக்காவிட்டால், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கட்சியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்கு முயற்சித்தவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்குப் பின்னால் நின்று உழைத்தவர்களும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிநிலைகளில் உரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் தான் அரசியலில் இருந்தே ஒதுங்கி விடப் போவதாக சஜித் தெரிவித்திருக்கிறார். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு தான் நிச்சயம் பதிலளிக்க வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான மக்களும் இதனையே எதிர்பார்க்கிறார்கள். எனவே கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கும் அவரே பொருத்தமானவர். தேர்தெலொன்றில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரொருவர் பெற்ற ஆகக் கூடிய வாக்குகளை அவரே பெற்றிருக்கிறார் எனவும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

தோல்விக்கு சஜித்தை காரணமாகக் கூற முடியாது. அவரது எதிராளி ஆகஸ்ட் 12 ஆம் திகதியே களத்தில் குதித்து விட்டார். சஜித்துக்கு போட்டியிடுவதற்கான அனுமதி அக்டோபர் 07 இலேயே கிடைத்தது. இதனால் அவரது பிரச்சாரத்தைத் திட்டமிட்டுக் கொள்ள அவருக்கு அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment