அரசியல் உள்நாட்டு செய்திகள்

அடுத்த தவணையில் போட்டியிட்டால் சஜித் வெல்வார்

Written by Administrator

சஜித் பிரேமதாச இம்முறைய தேர்தலில் போட்டியிட்டு அவசரத்தைக் காட்டிவிட்டார். இன்னும் ஐந்து வருடங்களின் பின்னரான தேர்தலில் போட்டியிட்டால் அவரால் நிச்சயமாக வென்றிருக்க முடியும் என ஐக்கிய பிக்கு முன்னணியின் செயலாளர் போபிட்டிய தம்மிஸ்ஸர தேரர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இம்முறைய தேர்தலில் சிவில் அமைப்புக்கள் வேண்டிக் கொண்டதன்படி கரு ஜயசூரிய போட்டியிட்டிருந்தால் அவர் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பார். அதிகமான சிங்கள வாக்குகளும் அவருக்குக் கிடைத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மஹகல்கடவல புன்னசார தேரர் கருத்து வெளியிடும் போது, புதிய ஜனாதிபதியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவருடன் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் பணியாற்ற வேண்டும். யாருக்கும் யாரையும் துன்புறுத்துவதற்கான உரிமை கிடையாது. ஜனாதிபதி ராஜபக்ஷ எங்களதும் ஜனாதிபதி. அவர் சிங்கள, முஸ்லிம், தமிழ் அனைவரதும் ஜனாதிபதி எனவும் அவர் தெரிவித்தார்.  

About the author

Administrator

Leave a Comment