அரசியல் உள்நாட்டு செய்திகள்

நல்லிணக்க அலுவலில் இருந்து சந்திரிகா விலகினார்

Written by Administrator

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சியில் தாபிக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைமைப்பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விலகியுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் இந்த அலுவலகத்துக்கென புதிய தலைவரொன்றை நியமிப்பதற்கு இடமளிக்கும் வகையிலேயே அவர் விலகியுள்ளதாகத் தெரிகிறது. தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான பல வேலைத்திட்டங்கள், குறிப்பாக வடக்கு கிழக்கை மையமாகக் கொண்டு இந்த அலுவலகத்தினால் நடத்தப்பட்டன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க தற்போதைய ஜனாதிபதிக்கு எதிரணியில் இருந்து பிரச்சாரம் செய்தார். 

About the author

Administrator

Leave a Comment