Features அரசியல்

முஸ்லிம் சிறுபான்மையை புறக்கணிக்கச் சொல்லுகிறதா இந்தியா?

Written by Administrator

லதீப் பாரூக்

ஆர்.எஸ்.எஸ். இன் இந்துத்துவ பாசிஸத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை முஸ்லிம்களையும் நோக்கி வெறுப்புணர்வைப் பரப்பி வருவதாகத் தெரிகிறது. இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டவுடன் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக தனது வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை பிரதமர் மோடி அனுப்பி வைத்திருந்தார். இது தொடர்பில் ரஜீவ ஜயவீர கொழும்பு டெலிகிராபில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிடும்போது, ஏழாவது நிறைவேற்றதிகார ஜனா திபதியாக கோதாபய ராஜபக்ஷ பதவி யேற்ற 72 ஆவது மணித்தியாலயத்தி லேயே ஓர் அழையா விருந்தாளி நாட்டுக்குள் நுழைந்தார். இந்தியப் பிரதமரின் விஷேட தூதுவராக வந்திறங்கிய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோத்தாவை இந்தியாவுக்கு வரவழைப்பதற்கான அழைப்பிதழையும் சுமந்து வந்தார். இந்தியாவின் எதிர்பார்ப்புக்களையும் அவர் இங்கு எத்திவைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன எனக் குறிப்பிடுகிறார்.

கொழும்புக்கான தனது விஜயத்தின் பின்னர் ராஜ்ய சபாவில் அமைச்சர் ஜெய்   சங்கர் உரையாற்றியபோது, தான் அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி என்பதை ஜனாதிபதி கோத்தபாய உறுதிப் படுத்தினார். இந்த உறுதிமொழி தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவரது விஜயத்தின் போதான எந்தக் கலந்துரையாடல்களிலும் இந்த உறுதிமொழி எடுத்துக் காட்டப்படுவதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதிலிருந்து தனது எல்லா உரைகளிலும் பிரதமர் மோடி தமிழரின் உரிமை   கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, குறிப்பெடுப்பதற்குக் கூட இலங்கையர் ஒருவரை அனுமதிக்காது இந்திய மொழிபெயர்ப்பாளரின் துணையுடன் மட்டும் மூடிய கதவுக்குள்ளால் நடத்தப்பட்ட இரு தரப்புப் பேச்சுவார்த்தையின் பின்னர் தலைவர்கள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் பிரதமர மோடி கருத்து வெளியிடுகையில், இன நல்லிணக்கத்துக்கான அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பார்வை தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார். சமத்துவம், சமாதானம், நீதி, கண்ணியம் என்பவற்றுக்கான தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் தனது நல்லிணக்க நடைமுறைகளைத் தொடரும் என்பதில் நான் திருப்தி அடைகிறேன். 13 ஆவது திருத்தத்தையும் அது உள்ளடக்கியதாகவிருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மையான முஸ்லிம்கள் தொடர்பில் பிரதமர் மோடி ஒரு வார்த்தையேனும் வெளியிடவில்லை. தீவிரப் பகையுடனான அவரின் இனவாத முகத்தைப் பற்றித் தெரிந்துள்ள முஸ்லிம்கள் அவர் முஸ்லிம்களுக்கு மனிதாபிமானம் காட்டுவார் என்பதை எதிர்பார்க்கவும் முடியாது.

அதனைத் தொடர்ந்து இந்தியா இலங்கைக்கான நிதி உதவி பற்றி அறிவித்தது. உள்ளகக் கட்டமைப்புக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் தருவதாக இந்தியா அறிவித்தது. அதற்கு முந்திய நாள் பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளினதும் பாதுகாப்பு முன்னுரிமை பெற்றிருந்தது. புலனாய்வுத் துறையிலும் பயங்கரவாதத்தை முறியடிப்பதிலும் ஆற்றலை அதிகரிப்பதற்கு இலங்கைக்கு இந்தியா எப்போதுமே உதவி வந்துள்ளது. இந்த ஆதரவினை நாங்கள் தொடர்ந்தும் வழங்குவோம் என பிரதமர் மோடி அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தெரிவித்திருந்தார்.

இந்த வேளையில், நாட்டில் பயங்கரவாதம் இல்லாத போது சொல்லப்படுகின்ற பயங்கரவாதத்துக்கு எதிராக ஏன் போரிட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. ஆர்.எஸ்.எஸ். பாணியிலான சிங்கள இனவாதக் குழுக்களின் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட அப்பாவி நிராயுதபாணி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதம் மட்டுமே இங்கு நிலவுகிறது. மே 2009 இல் எல்ரிரிஈ தோற்கடிக்கப்பட்டதில் இருந்து இது தொடங்கி ஈஸ்டர் தாக்குதலின் பின் மும்முரமாகியது.

1947 பிரிவினைக்குப் பின்னர் இந்திய முஸ்லிம்கள் மீதான ஆர்.எஸ்.எஸ். இன் ஆயிரக்கணக்கான தாக்குதல்களை ஒத்ததான ஈஸ்டர் தாக்குதல்களில் வெளிநாட்டுச் சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் அமைச்சர்களும் கருதினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் பல தடவைகளில் சுட்டிக் காட்டியிருந்தனர். இருந்தாலும் மைத்திரி – ரணிலின் கடந்த அரசாங்கத்தினால் இந்த வெளிநாட்டுச் சக்திகள் யார் என்பதனை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் ஏப்ரல் 4 ஆம் திகதியே இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலியப் புலனாய்வு மொஸாட்டும் ஆர்.எஸ்.எஸ். உம் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என ஊகங்கள் தெரிவித்தன. ஆனாலும் ஊடகங்களின் இனவாதக் கூலிப்படைகள் இதனை இருட்டடிப்புச் செய்தன.

இன்னொரு பக்கத்தில் மோடி சமாதானத் தேவதையல்ல. அவர் முதலமைச்சராக இருக்கும் போது 2002 மேயில் குஜராத்தில் முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட்டதற்காக குற்றம் சாட்டப்பட்டவர். அமெரிக்காவாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் நாட்டுக்குள் நுழையத் தகுதியற்றவர் என ஒரு காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்டவர். இந்த மோடிதான் தற்பொழுது உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். இவர் தான் இப்பொழுது பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறார்.

பிராமணர் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும் இதனைப் பரவலாகப் பிரசாரம் செய்கின்றன. ஆறு வருடங்களுக்கு முன்னர் இவர் பதவியிலமர்ந்த போதே முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். முஸ்லிம் பெண்களின் புதைகுழிகளைத் தோண்டியெடுத்து அவர்களைக் கற்பழிக்குமாறு பிஜேபியின் உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்ய யோகி, தனது இந்துத்துவா குண்டர்களுக்கு உத்தரவிட்டார். இந்தக் காட்டுமிராண்டித் தனம் இம்மியளவும் குறையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மதங்களும் கலாச்சாரங்களும் ஊற்றெடுத்த பழம் பெரும் இந்தியாவின் இன்றைய நிலை இதுதான்.

வொஷிங்டன், டெல்அவிவ், புதுடில்லி அச்சின் கீழ் மொத்த மத்திய கிழக்கையும் மூலையில் தள்ளி தெற்காசியாவை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதற்கு இஸ்ரேலும் இந்தியாவும் ஒன்றிணைந்திருக்கின்றன என்பது யாவரும் அறிந்த விடயம். பாரிய இந்தியாவின் எல்லை ஆப்கானிஸ்தானிலிருந்து தெற்காசியா வரை விரிந்தது என பிஜேபியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஒரு முறை அல்ஜஸீராவிடம் தெரிவித்திருந்தார். அறிவுள்ள இலங்கையருக்கு இதில் தெளிவான செய்தி இருக்கிறது. இதனால்தான் இலங்கையில் இந்தியாவினதும் இஸ்ரேலினதும் பிரசன்னம் தொடர்பில் இலங்கையர் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் பாணியிலான சிங்களத் தீவிரவாத வன்முறைகள் சிங்களவர் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சு விதைகளைத் தூவின. இதன் விளைவாக பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளால் ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க முடியுமாக அமைந்தது. தவிர்க்க முடியாமல் நாடு பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையில் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஆக்கமா அழிவா என்ற நிலைக்கு புதிய ஜனாதிபதியைத் தள்ளியிருக்கிறது. கடந்த காலத் துன்பங்களை மறந்து புதிய ஜனாதிபதியுடன் ஒன்றாய் இணைந்து வேலை செய்வதற்கான தமது ஆர்வத்தை தமிழர்களும் முஸ்லிம்களும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இனி நாட்டு மக்களை ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி நகர்த்துவது ஜனாதிபதி கோத்தபாயவின் கைகளில் உள்ளது. அனைவரும் ஒன்றாய் வாழக் கூடிய சொர்க்க புரியாக மீண்டும் இந்த அழகிய நாட்டைக் கட்டியெழுப்புவது தான் தற்போதைய உடனடித் தேவையாக முன் வந்து நிற்கிறது.

About the author

Administrator

Leave a Comment