முச்சக்கர வண்டிக் கட்டணம் இறங்குகிறது

0
3

இதுவரை 60 ரூபாவாக இருந்த ஆரம்பக் கிலோமீட்டருக்கான முச்சக்கர வண்டிக் கட்டணம் 50 ரூபாவாகவும், அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்குமான 45 ரூபா கட்டணம் 40 ரூபாவாகவும் நேற்று (01) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக சுய தொழிலாளர் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனத் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் வழங்கிய வரிச்சலுகைகளை முன்னிட்டே இந்த கட்டணக் குறைப்பை வழங்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

சம்மேளனத் தலைவர் இவ்வாறு அறிவித்த போதிலும் ஏற்கனவே பல முச்சக்கர வண்டிகள் ஆரம்பக் கட்டணமாக 50 ரூபாவையும், அடுத்த கிலோமீட்டருக்கான கட்டணமாக 40 ரூபாவையுமே அறவிட்டு வருகின்றன. இதிலிருந்து முச்சக்கர வண்டிகள் அறவிடும் கட்டணம் தொடர்பில் சம்மேளனத் தலைவர் ஓர் ஒழுங்கினைப் பேண வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.