ரொனால்டோ 06 ஆவது முறையாகவும் குளோபல் ஸொக்கர்

0
5

ஐரோப்பிய வீரர்கள் சங்கம் வழங்கும் குளோபல் சொக்கர் விருதின் (Global Soccer Award) 2019 ஆம் ஆண்டுக்கான விருதினையும் ரொனால்டோ சுவீகரித்துக் கொண்டார். 2011 முதல் 08 வருடங்களாக ஐரோப்பிய வீரர்கள் சங்கம் வழங்கி வரும் இந்த விருதை ஐந்து தடவைகள் ரொனால்டோ வென்றுள்ளார். 2016 முதல் தொடர்ந்து மூன்று வருடங்களாக ரொனால்டோ இந்த விருதினைப் பெற்றுச் சாதனை படைத்தார். 08 வருடங்களில் ரொனால்டோ 5 தடவையும், லயனல் மெஸ்ஸி, பெல்காவோ, ரிபேரி ஆகியோர் ஒவ்வொரு முறையும் இந்த விருதை வென்றுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் தமது அணிக்காகவும் கழகங்களுக்காகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்த வீரர்கள் இந்த விருது வழங்கி  கௌரவிக்கப்படுகின்றனர். 2019 இல் இத்தாலி CT A சம்பியன் பட்டத்தை ஜுவென்டஸ் வெல்ல உதவியமை, சர்வதேச லீக பட்டத்தை போர்த்துக்கல் அணி வெல்ல உதவியமை போன்ற காரணங்களுக்காக ரொனால்டோ இந்த விருதுக்குத் தகுதியானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here