2020 தேசிய விளையாட்டு விழா செம்டம்பரில்

0
1

விளையாட்டு அமைச்சினால் நடத்தப்படும் பிரதான விளையாட்டு விழாவான வருடாந்த தேசிய விளையாட்டு விழா இம்முறை 46 ஆவது தடவையாக நடைபெறவுள்ளது. வீண் விரயங்களைக் குறைக்கும் வகையில் இவ்விழா மூன்று கட்டங்களாக நடைபெறும்.

இதன் முதலாவது கட்டம் கொழும்பிலும் இரண்டாவது கட்டம் அனுராதபுரம், பொலன்னறுவையை மையப்படுத்தி வட மத்திய மாகாணத்திலும், இறுதிக் கட்டம் கொழும்பு சுகததாச அரங்கிலும் நடைபெறும்.

தேசிய மட்டத்திலான போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்கான மாகாண மட்டப் போட்டிகளை ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் முடிப்பதற்கும், தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகளை செப்டம்பர் இறுதிப் பகுதியில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதி நாள் நிகழ்வுகளில் வழமையாக இடம்பெறும் தடகளப் போட்டிகளுக்கு மேலதிகமாக இம்முறை நீச்சல் போட்டிகளும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

வார இறுதிகளில் போட்டிகளை நடத்துவதால் ஏற்படும் காலவிரயத்தையும் நிதி விரயத்தையும் தவிர்ப்பதற்காகவே இம்முறை மூன்று கட்டங்களாகப் போட்டிகள் நடக்கவுள்ளன என விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் தம்மிக முதுகல தெரிவித்தார். மழையினால் போட்டிகளுக்கு ஏற்படும் தடங்கல்களைக் கருத்திற் கொண்டே இம்முறை போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here