பிரதான செய்திகள்

SMART Classrooms கையளிப்பு நிகழ்வு

Written by Ahsan Ariff

திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலைக்கு 2020 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்;ப்பு நிகழ்வும் 5 ஸ்மாட் வகுப்பறைகள் பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக களனி மற்றும் கம்பஹா வலயங்களுக்கான தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான உதவி கல்விப் பணிப்பாளர் திரு. எம்.டீ.எம். தௌஸீர் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர். குறித்த 5 ஸ்மாட் வகுப்பறைகளையும் குறித்த வகுப்பின் பெற்றோர்கள் தமது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

About the author

Ahsan Ariff

Leave a Comment