அரசியல் உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் துரிதம்

Written by Administrator

கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2010 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இருந்த அரசாங்கத்தினால் கலேவெல வரையில் பொத்துகர வரையிலான வீதிக்கான திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டம் 3 கட்டங்களின் கீழ் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் கடனைச் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிர்மாணப் பணிகள் மெதுவாக இடம்பெற்றன. மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 4 பிரிவுகளின் நிர்மாணப் பணிகள் 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பூர்த்தி செய்யப்படவிருந்தது. ஆனால் அது திட்டமிட்டபடி பூர்த்தி செய்யப்படவில்லை. தெளிவான வேலைத்திட்டம் இல்லாமையினால் தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்கும் முடியாமல் இருந்தது. தற்போதைய அரசாங்கம் இதன் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment