உள்நாட்டு செய்திகள்

தபாற்காரர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்

Written by Administrator

தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது. இதற்காக அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொள்வதற்காக தபால் ஊழியர்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் மூலம் நிவாரண வட்டியில் கடன் பெற்றுக்கொடுக்கப்படும். இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தபால் அலுவலகங்களில் வசதிகள் செய்யப்படும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

இதேபோன்று தபால் அலுவலகங்கள் மூலம் துரிதமாக பொதிகளை அனுப்புவதற்காக Speed Post என்ற பெயரில் தபால் பொதி சேவையை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்தச் சேவை கொழும்பு, நுவரெலியா, காலி, கண்டி ஆகிய தபால் அலுவலகங்கள் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதன் பின்னர் 5000 தபால் கிளைகளை உள்ளடக்கிய வகையில் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து அலிபாபா, அமெசன் போன்ற நிறுனங்கள் மூலம் அனுப்பப்படும் பொதிகள் இந்தச் சேவையின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது. தபால் அலுவலகத்துக்கு பொதிகளை கையளித்தவர்களுக்கு அவை விநியோகிக்கப்பட்ட பின்னர் குறுஞ்செய்தி மூலம் அது தொடர்பாக அறிவிக்கப்படும்.

About the author

Administrator

Leave a Comment