அரசியல் உள்நாட்டு செய்திகள்

அரச நிதி பற்றிய குழுவில் முஜிபுர் ரஹ்மான், கலாநிதி இஸ்மாயில்

Written by Administrator

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் தலைமையில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் உள்ளடக்கபட்டுள்ளனர்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமைய 2020 ஜனவரி 24 ஆம் திகதி கூடிய தெரிவுக் குழு தெரிவு செய்த குழு உறுப்பினர்களை சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

கலாநிதி பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுசந்த புஞ்சிநிலமே, தாரக பாலசூரிய, காஞ்சன விஜேசேகர ஆகிய அமைச்சர்களும் டிலான் பெரேரா, பிமல் ரத்னாயக்க, மயந்த திஸாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி எஸ்.எம். முகம்மட் இஸ்மாயில் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment