அரசியல் உள்நாட்டு செய்திகள்

COPE இல் ஹக்கீம் COPA வில் அலிஸாஹிர்

Written by Administrator

ஜனவரி 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு, 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்குத் (COPA) தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களில் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அமைச்சர்களான பவித்திரா வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்த்தன, லசந்த அழகியவண்ண, ஷெஹான் சேமரசிங்க, சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பாலித ரங்க பண்டார, நிரோஷன் பெரேரா, அலிசாஹிர் மௌலானா, புத்திக பத்திரன, எஸ்.சிறிதரன், டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு, 120 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு 16 பேரை நியமித்தது. இதில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ஜயந்த சமரவீர மற்றும் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், விஜயதாச ராஜபக்ஷ, ஹர்ஷ டி சில்வா, அஜித்.பி.பெரேரா, சிரியான விஜயவிக்ரம, ரஞ்சன் ராமநாயக்க, அசோக்க அபேசிங்க, சுனில் ஹந்துன்நெத்தி, மாவை சேனாதிராஜா மற்றும் டி.வி.சானக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

About the author

Administrator

Leave a Comment