நுவரெலியா பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு தொடர்பில் மகஜர்

127

நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்படவுள்ள பிரதேச செயலகங்களை பொருத்தமான இடங்களில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமாரவிடம், 20ஆயிரம் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

தலவாக்கலை, நோர்வூட் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய பிரதேச செயலகங்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு செயலகத்தை இராகலை பகுதியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார கருத்துத் தெரிவிக்கும் போது, தற்போது பிரதேச செயலகங்களை அமைப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான சகல நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன என்றும், மார்ச் மாதம் உத்தியோகபூர்வமாக பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் இராகலை பகுதியில், செயலகம் அமைக்குமாறு கோரிக்கை விடுப்பது சிறந்த விடயம் என்றும், அது தொடர்பில் கவனஞ்செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.