மீண்டும் கருத்து வேறுபாட்டை உருவாக்க புர்காவைப் பயன்படுத்தி பாதசாரிகளை வெறுக்கவும்

75

லக்மால் ஹரிஸ்சந்த்ர

வத்தளையில் உள்ள ஆர்பிகோவில்தன்னை வீடியோ எடுத்து கொண்டிருந்த ஒரு ஆணுக்கு (ஒரு சிங்கள கிறிஸ்தவர்)ஒரு புர்கா உடையணிந்த முஸ்லிம் பெண் சவால் விடுத்துள்ள ஒரு சுவாரஸ்யமான வீடியோ இந்த நாட்களில் பரவியது.  அவர் அந்தப்  பெண்ணின் நிகாபைச் சுட்டிக்காட்டி இது நாட்டின் சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது எனக் கூற அவர் அதனை மறுத்துக் கொண்டிருந்தார். அவன் உங்களது கண்களை மட்டுமே பார்க்க முடிகிறது என்னும்போது, ​​அந்தப் பெண் அவனிடம் இன்னும் என்ன பார்க்க விரும்புகிறாய் என்று கேட்கிறாள். அவரது அந்தரங்கத்தைப் பாதிக்கும் வீடியோவை எதிர்த்து அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த முழு சம்பவமும் சமூக ஊடகங்களில் துருவப்படுத்திய விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.  இது சிங்கள முஸ்லிம் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் பெண் சிங்கள இனத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததாக ஒரு சாராரும், சிங்கள இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு சிங்கள கிறிஸ்தவர் செயல்பட்டுள்ளதாக இன்னொரு சாராரும் விடயத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.  ‘முஸ்லீம்’ தீவிரவாதிகளின் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை மக்களுக்கு நினைவூட்டும் வெறுக்கத்தக்க இடுகைகளுடன் சமூக ஊடகங்கள் தீவிரமாக செயற்படுகின்றன. (அந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் ஜீன்ஸ் / ஸ்லாக்குகளையே அணிந்திருந்தார்கள், புர்காவை அல்ல என்பதை நாங்கள் மறந்து விடுகிறோம். அரசாங்கத்தின் குற்றத்தை மறைத்து கவனத்தை திசை திருப்பவே புர்கா தடை பயன்பட்டது). இன்னொருபுறத்தில், சட்டத்துக்கு முரணாக இல்லாத வரையில், தான் விரும்பியதை அணிந்துகொள்வதற்கான தனது உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர் துணிச்சலுடன் செயல்பட்டார். ஈஸ்டர் ஞாயிறு சோகத்திற்குப் பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு இந்த தடை விதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், பாதுகாப்பு அச்சங்கள் இருந்தால் எந்தவொரு சோதனைக்கும் தன்னை சமர்ப்பிக்க முன்வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு இந்த ஆடையின் பொருத்தம் குறித்து எனக்குத் தனியான கருத்து இருக்கிறது. மட்டுப்படுத்தப்பட்ட எனது அறிவின் அடிப்படையிலும், எனது முஸ்லிம் நண்பர்களிடமிருந்து நான் கேட்டறிந்தவைகளின் அடிப்படையிலும் முஸ்லிம் பெண்களுக்கு இந்த வகை ஆடைகளை இஸ்லாம் பரிந்துரைக்கவில்லை. மாறாக அது அவரவர் தெரிவுக்குட்பட்ட விஷயம். பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் இந்த மாதிரியான ஆடைகளை (புர்கா அல்லது நிகாப்) அணியாமை இதனை விளக்குகிறது. இந்த முக்கியமான விஷயத்தில் இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒரு அறிவார்ந்த விவாதம் நடைபெறுகிறது. இலங்கையின் உலமா சபை கூட பாதுகாப்பு சூழலில் முகமூடி விஷயத்தில் விவேகத்துடன் செயல்படுமாறு முஸ்லிம்களை அறிவுறுத்தியுள்ளது.  பாரம்பரியவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் இந்த விடயத்தில் தமது சொந்த வாதங்களைக் கொண்டுள்ளனர். எப்படியிருந்தாலும், பலரும் புரிந்து கொண்டுள்ளது போல ஹிஜாப் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு அல்ல என்பதை நான் அறிவேன்.  மாறிவரும் சூழலுக்கு ஏற்ப முஸ்லிம் பெண்களுக்கு அவர்களின் ஆடையின் நிறம், வடிவமைப்பு மற்றும் வடிவத்தை தேர்வு செய்வதற்கான முழுச் சுதந்திரம் உள்ளது. இதனுடைய இறுதி நோக்கம் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக பாதுகாப்பதும், அடக்கமான உடையையும் நடத்தையையும ஊக்குவிப்பதும் ஆகும். இது பாலினங்களிடையே ஒரு தடையை உருவாக்கி, நம் வாழ்க்கையை அடக்கம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ வழிவகுக்கிறது.

அடுத்ததாக, முஸ்லிம் பெண்களுக்கும், பிற இனங்களைச் சேர்ந்த பெண்களைப் போலவே அவர்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தையும் பயன்படுத்த அரசியலமைப்பில் உரிமை உண்டு. ஒரு முஸ்லிம் பெண் தனது விருப்பமான ஆடைகளை சட்டத்தின் எல்லைக்குள் அணிய விரும்பினால், மற்றொரு முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தைத் தொடங்கும் வகையில் அவளைச் சவாலுக்குட்படுத்த மற்றவர்களுக்கு எந்த சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை. குறித்த ஆடை தொடர்பில் எமது விருப்பு வெறுப்புகள் எதுவாக இருந்தாலும், எந்தவொரு குடிமகனுக்கும் மற்ற குடிமக்களை போலியான வாதங்களில் கட்டுப்படுத்தும் உரிமை உள்ளதா என்ற கேள்வியைச் சுற்றியே இது சுழலச் செய்கிறது. சட்டத்தை அமுல்படுத்தும் வேலையை சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் விட வேண்டும். இந்தச் சம்பவத்தில், கடந்த ஆண்டு ஒரு குறுகிய கால தடைக்குப் பிறகு முகத்தை மூடுவதற்கு எதிரான தடை நீக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. மேற்கூறிய சம்பவத்தில், குறித்த முஸ்லிம் பெண், நாகரிகமான முறையில் இந்த யதார்த்தத்தை அந்த ஆணுக்கு விளக்கி, தான் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதாகவும், இந்த உண்மையை நிரூபிக்க அவர் விரும்பினால் காவல்துறையினரின் முன் செல்ல தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறாள்.

ஹிஜாப் மற்றும் புர்கா உள்ளடங்கிய முஸ்லிம் உடைகள் பற்றி பல தவறான கருத்துக்கள் இருந்தபோதிலும்,  முஸ்லிம் சகோதரிகளுடனான எனது பல கலந்துரையாடல்கள், ஹிஜாப் அணிந்த பெண்கள் இஸ்லாமிய ஆடைப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெற வேண்டிய பல நன்மைகளை எடுத்துக்காட்டுகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன. ஹிஜாப் அணிவது சமூகத்தின் விரும்பத்தகாத எதிர்பார்ப்புகளிலிருந்து “விடுவிப்பதாக” சிலர் விவரிக்கிறார்கள். அவர்கள் இனி பாலியல் பொருள்களாக கருதப்படுவதில்லை, மாறாக அவர்களின் அறிவுக்காக விரும்பப்படுகின்றார்கள். அவர்கள் இனி அவர்களின் தோற்றம் அல்லது உடல் கட்டடைப்புக்காக விரும்பப்படுவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமைக்காகவும் நன்னடத்தைக்காகவுமே விரும்பப்படுகிறார்கள். ஹிஜாப் அணிந்த பெண்கள் இது தாங்கள் வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலைக் குறைக்கிறது என்று தெரிவிக்கின்றனர். இந்தவகையில் பலரும் நம்பியிருப்பது போல இந்த உடை அவர்கள் மீது திணிக்கப்படவில்லை; மாறாக அந்த சகோதரிகளே இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஒரு பொதுத் தொல்லையாகக் காணப்பட்ட  ‘ அவர்களை விட உன்னதமானதாக தங்களைக் கருதும்“ பல  கதாபாத்திரங்கள்,  தங்களது தேசபக்தி, ஒழுக்கநெறி, சமூக நடத்தை விதிகள் மற்றும் நெறிமுறைகளை அடுத்தவர்கள் மீது திணிக்கின்ற அதிகாரப்பூர்வமற்ற காவல்துறையாக செயல்பட்டன. குறிப்பாக துறவிகள் மற்றும் சிங்கள சமூக ஊடக வீரர்கள் இந்த விஷயத்தில் முன்னணியில் உள்ளனர். இது ஒரு ஆபத்தான போக்கு. இது முஸ்லிம் வெறுப்பு அத்தியாயங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தவே வழிவகுக்கும்.  இது ஈஸ்டர் ஞாயிறுக்கு பின்னரான முன்னேற்றங்களுக்குப் பிறகு தற்போதைய சிங்கள மேலாதிக்க அரசாங்கத்தின் ஆட்சியில் கவலைக்குரிய திருப்பத்தை எடுத்தது.   இந்த புர்கா சம்பவத்தை சமூக ஊடகங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளபடி சிங்கள இனத்திற்கு ஒரு அவதூறாக அல்லது சவாலாக உருவாக்குவது ஆபத்தானது. சிங்கள மொழியிலான அவரது உரையாடல் இந்த நாட்டின் குடிமகனாக முஸ்லிம் பெண் தனது உரிமைகளை தெளிவாக எடுத்துரைக்கும் நிகழ்வேயன்றி சிங்கள மக்களுக்கு எந்தவிதமான தீங்கு விளைவிக்கும் நோக்கமும் இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. சமூக ஊடக வீரர்களின் போர்வையில் வெறுக்கத்தக்க பொறுக்கிகள் இந்த சம்பவத்தை ஒரு இன அல்லது மத வெறுப்புச் சம்பவமாக மாற்ற முயற்சிப்பது கண்டிக்கப்பட வேண்டும், மேலும் இன மற்றும் மத வெறுப்பைத் தூண்டியதற்காக இவர்களை பொறுப்புள்ளவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்.

மற்ற சமூகங்களை ஒழுங்குபடுத்த முயற்சிக்கும் சிங்கள ஒழுக்கநெறியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம், இன்றைய சிங்களவர்கள் பௌத்த ஆடையைப் பின்பற்றுகிறார்களா என்று கேட்க வேண்டும். மகா சங்கத்தின் பல புகழ்பெற்ற பிக்குமார்கள் கோயில்களுக்குச் செல்லும்போது கூட இளம் சிங்கள பெண்கள் மத்தியில் மோசமடைந்து வரும் ஆடைக் குறியீடுகள் குறித்து பிரஸ்தாபித்துள்ளனர். களனி மற்றும் பெல்லன்விலவில் கூட இந்த அவமானகரமான காட்சிகளை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். பௌத்த பிக்குகள் முஸ்லிம் ஆடைகளை மிகவும் நாகரீகமாகவும், அடக்கமாகவும் பாராட்டியுள்ளனர். சிலவேளை, முஸ்லிம்கள் பண்டைய சிங்கள மரபுகளை பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

பெண்கள் உடை தொடர்பில் முஸ்லிம் பெண்களின் மறைப்பும் பண்டைய சிங்கள மரபுகளும்

சிறிது காலத்திற்கு முன்பு பேராதெனிய பல்கலைக்கழகத்தில் ஒரு சம்பவம் நடந்தது.  கொழும்பிலிருந்து வந்த பெண்ணியம் பேசும் ஒரு புதுமுகத்திடம் அவரை ரக்கிங் செய்த சிரேஷ்ட மாணவன் வாங்கிக் கட்டிக் கொள்ள நேர்ந்தது. ஏன் நீ இப்படி இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து வருகிறாய், நாளை வரும் போது சிங்களப் பாரம்பரிய முறையில் கவுன் அணிந்து வர வேண்டும் என சீனியர் மாணவன் கூறுகிறான். அதற்கு அவள் நையாண்டியான பாணியில் ”கவுன் என்றால் என்ன? கவுன் என்பது  சிங்களம் அல்ல; அது போர்த்துகீசியம். சிங்களப் பாரம்பரியம் என்றால் நான் ஒசரிய (கண்டியன் சேலை) அல்லது ரெத்த-ஹட்ட (பாவாடை தாவணி) அணிய வேண்டும். நீங்கள் மட்டும் கால்சட்டையும் ஷேர்ட்டும் அணிந்திருப்பது எப்படி? நீங்கள் உண்மையான சிங்கள முறையில் ஆடை அணிய விரும்பினால் நீங்கள் ஒரு சாரமோ அல்லது கோவணமோ அல்லவா  அணிய வேண்டும் எனப் பொரிந்து தள்ளினாள். சிரேஷ்ட மாணவன் முகத்தில் ஈயாடவில்லை.

மேற்கண்ட சம்பவம்  சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.  உண்மையான தேசிய உடை அல்லது உண்மையான சிங்கள / தமிழ் உடை எது என்பதைப் பற்றி பலருக்கு இருக்கும் குழப்பத்தின் அறிகுறியே இது. இலங்கைத் தீவின் வரலாற்றில் எந்த நேரத்திலும் இதுபோன்ற ஒரு தனித்துவமான ஆடை முறை இருந்ததா என்பது சந்தேகமே. டாக்டர் நீரா விக்ரமசிங்க, “இலங்கையில் உடை குறித்து சில கருத்துகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், ஆச்சரியமான சில உண்மைகளை வெளிப்படுத்துகிறார், குறிப்பாக பண்டைய இலங்கைப் பெண்களின் மேலாடை அணியாத ஆடைக் கலாச்சாரத்தை வரலாற்று ஆதாரங்களின்படி அவர் விவரிக்கிறார். இன்று தீவு முழுவதும் அனைத்துத்  தரப்புப் பெண்களும் அணியும் சேலை மற்றும் ஜாக்கெட் கலவையி பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட பின்னரே இந்த வடிவை எடுத்திருக்கின்றன. ஆறாம் நூற்றாண்டின் சிகிரிய ஓவியங்களுக்கு முன்னர் மகாவம்சத்தில் ஆடை அணிவது குறித்து உள்ள சில மறைமுகக் குறிப்புகளைத் தவிர, இலங்கையில் பெண்கள் ஆடை அணிந்திருந்த விதம் குறித்த உண்மையான பதிவு எதுவும் இல்லை. மாற்றமடையாத விதி என்பது பெண்களின் ஆடைகளுக்கு பொருந்தாது என்பது உறுதி” என கலாநிதி நீரா குறிப்பிடுகின்றார்.

“ஒரு இந்து-பௌத்த  சமுதாயத்தில் அரை நிர்வாணம் எந்த கட்டத்தில் தடைசெய்யப்பட்டது என்பதை துல்லியமாக மதிப்பிடுவது கடினம். பத்தாம் நூற்றாண்டில் ஒரு சாதாரண பக்தரான ரோஹினி,  தோல் நோயால் எஞ்சியிருக்கும் அடையாளங்களை மறைக்க மட்டுமே அனுருத்த தேரருக்கு முன் ரவிக்கை அணிந்ததான ஒரு சம்பவத்தை தம்மபத கதா விவரிக்கிறது. பெண்கள் உடலை மறைப்பது அசாதாரணமானதாக இருந்துள்ளது என்பதை இது குறிக்கிறது. பெண்களின் உடை இடுப்பைச் சுற்றிய ஒரு துணியாகவே இருந்தது. இடுப்புக்கு மேலான உடலின் மேற்பாகம் மறைக்கப்படவில்லை. பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் வீடுகளில் இருக்கும் போது ஆடை அணிவது விதிக்கப்பட்டிருக்கவில்லை. வீட்டிலிருந்து வெளியே வரும் போது அவர்கள் மேலாடையும் அணிபவர்களாக இருந்தார்கள் என கலாநிதி நீரா குறிப்பிடுகின்றார்.  இந்தக் காலப்பிரிவில் மார்பகங்கள் மறைக்கப்பட்டு இடுப்புக்கு மேல் தனியானதொரு ஆடையாக தோள்களைச் சுற்றி அணியப்பட்டது. இது தான் முந்தானையாகப் பரிணமித்தது.  பண்டைய இலங்கையின் இந்து-பௌத்த கலாச்சாரம்,  வீட்டை விட்டு வெளியேறும்போது பெண்களுக்கு மேல் ஆடையை ஒரு அங்கமாக மாற்றும் அளவுக்கு 14 ஆம் நூற்றாண்டில் எப்படி இத்தகைய மாற்றங்களுக்கு ஆளானது ?

ஏ. எல். பாஷாம், தி வொண்டர் தட் வாஸ் இந்தியா என்ற நினைவுக் குறிப்பில், பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெண்கள் வட இந்தியாவின் சில பகுதிகளில் குளிர்காலத்தின் போது அணிவதைத் தவிர மேலாடைகளை அணியவில்லை என்று குறிப்பிடுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தென்னிந்தியாவின் நாயர் பழங்குடிப் பெண்கள் மேலாடை அணியவில்லை என்ற உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார். முஸ்லிம் படையெடுப்புகள்தான் இந்தியப் பெண்களின் ஆடைப் பாரம்பரியத்தை மாற்றியமைத்தன என்று பாஷம் குறிப்பிடுகிறார். 14 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் குருநாகல இராச்சியத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது என்பதை இலங்கையில் எவரும் அவதானிக்கலாம்.  கி.பி 1320 இல் இளவரசர் வஸ்திஹிமி என்ற  முஸ்லிம் மன்னர் கூட அரியணையில் ஏறி ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார் குருநாகல விஸ்தரய கூறுகிறது.  16 ஆம் நூற்றாண்டு முதல் தொடங்கிய மேற்கத்திய தாக்கங்கள் இலங்கை பெண்களை அவர்களின் உடையில் மிகவும் பழமைவாதமாக மாற்றுவதன் விளைவைக் கொண்டிருந்தது என நீரா எழுதுகிறார்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இந்து மற்றும் பௌத்த சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்பட்ட, தமிழர்களிடையே ஆறுமுக நாவலரும், சிங்களவர்களில் அனகரிகா தர்மபாலாவும் தோன்றினர். அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனின் தூய்மையான விக்டோரியன் கலாசாரத்தை இலங்கை சமுதாயத்தின் மீது திணித்தனர். கி.மு.5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19 ஆம் நூற்றாண்டு வரை  பண்டைய இலங்கையில் நிலவிய ஆடைக் கலாச்சாரத்துக்கு மாற்றமாக உடலமைப்பு அம்சங்களை முடிந்தவரை மறைப்பதே நல்லது என்று சராசரி இலங்கையர் அதுவரை ஏற்றிருந்தனர். (ஆதாரம்: http://livingheritage.org/toplessness.htm)

தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய முஸ்லிம்களுக்கும் அனுமதிக்க வேண்டும்

ஒழுக்கம் அல்லது நன்னடத்தை  என்பது ஆடை ஒழுங்கின் முறையாகும்.  இது மற்றவர்களிடையே பாலியல் ஈர்ப்பை ஊக்குவிப்பதைத் தவிர்க்க விரும்புகிறது. ஒழுக்கம் பற்றிய பெரும்பாலான விவாதம் ஆடை வரையறைகளை உள்ளடக்கியே அமைகிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்பாடுகள் மற்றும் ஒழுக்கத்திற்கான அளவுகோல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து உலகின் பெரும்பகுதிகளில் தொடர்ந்து தளர்த்தப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியாக, பழமைவாத ஆடை என்பது பெரும்பாலும் மத பின்பற்றலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. மதத்தை பி்ன்பற்றும் முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் ஹிஜாபினை அணிந்துகொள்கிறார்கள் மற்றும் பொது இடங்களில் தளர்வான, உடலமைப்பை வெளிக்காட்டாத ஆடைகளை அணிவார்கள்; மற்றும் பாரம்பரிய கிறிஸ்தவ சமூகங்களில் உள்ள பெண்கள், தலை முதல் கால் வரை, நீண்ட ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள், சில சமயங்களில், தலையையும் மூடி அணிவார்கள். பௌத்தர்களுக்கென ஆடை ஒழுங்குகள் எதுவும் இல்லை.

 எனவே, முஸ்லிம் பெண்களுக்கு தமது ஆடைப் பாரம்பரியத்தில் தங்கள் சொந்த மரபுகளைப் பின்பற்ற அனுமதிக்கப்பட வேண்டும். பெரும்பாலானவர்கள் பொதுவாக அறியப்பட்ட ஹிஜாபை அணிந்துகொள்கிறார்கள் (முகம் மற்றும் கைகளைத் தவிர அவர்களின் உடலை மூடிக்கொள்கிறார்கள்), ஒரு சிறிய எண்ணிக்கையினர் நிகாப் அணிகிறார்கள் (கண்களைத் தவிர முழு உடலையும் மூடுகிறார்கள்). அரைகுறை ஆடையை நம்மால் அங்கீகரிக்க முடியுமானால், ஏன் முழு அளவிலான ஆடையை நம்மால் அங்கீகரிக்க முடியாது?

சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ், அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் மற்றும் அவர்களின் மதம் அல்லது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. மக்கள் ஆடை அணிவது அவர்களின் மத, கலாச்சார அல்லது தனிப்பட்ட அடையாளம் அல்லது நம்பிக்கைகளின் முக்கியமான வெளிப்பாடாக இருக்கலாம். பொதுவான விதியின்படி, மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான உரிமை என்பது ,ஒவ்வொருவரும் தாம் எதை அணிய வேண்டும் – எதை அணியக்கூடாது என்பதை சுதந்திரமாகத் தெரிவு செய்வதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நபரினதும் நம்பிக்கைகள் அல்லது அடையாளத்தை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கின்ற, பாதுகாக்கின்ற மற்றும் உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசாங்கங்களுக்கு உள்ளது. ஒவ்வொரு நபரும் தமக்குரிய தெரிவை வற்புறுத்தலின்றி செய்யக்கூடிய சூழலை அவர்கள் உருவாக்க வேண்டும். இந்த சமூக ஊடக வீரர்கள் அல்லது காவி உடையில் தாமாக நியமித்துக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற பொலிஸ் என்று அழைக்கப்படுபவர்களால் குறிப்பிட்ட வழிகளில் ஆடை அணிவதற்கு தனிநபர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதில் இருந்து  பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்துதல் ஆகியவை கடுமையான மூன்று வேளைகளில் மட்டுமே கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம்:

1. அவை சட்டத்தால் பரிந்துரைக்கப்பட வேண்டும்;

2. சர்வதேச சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நியாயமான நோக்கத்தை நிவர்த்தி செய்தல்; மற்றும்

3. அவசியமானதாகவும், குறித்த நோக்கத்துக்கு பொருத்தமாகவும் இருத்தல்.

 மேலும், எந்தவொரு கட்டுப்பாடுகளும் பாகுபாடற்றதாக இருக்கக்கூடாது அல்லது உரிமையை பாதிக்கக்கூடாது அல்லது பிற மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது.