Features சர்வதேசம்

ஜெய் ஸ்ரீ ராம்: டில்லியின் நரேந்திர மோ(ச)டியின் கொலைமொழி

Written by Administrator

கலாநிதி றவூப் ஸெய்ன்

பெப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் டில்லியின் புறநகர் பகுதிகளில் மூடப்பட்ட கலவரத் தீயின் சாம்பல் மேடுகள் இன்னும் புகைந்துகொண்டிருக்கின்றன. 1984 இற்குப் பின்னர் டில்லி சந்தித்த மிகக் குரூரமான இனவெறியாட்டம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1984 இல் இந்து வெறியர்களால் 3000 சீக்கியர்கள் ஓரிரு தினங்களில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.

1992 இல் அயோத்தியின் பாபரி மஸ்ஜித் காவிப் பயங்கரவாதிகளால் உடைத்து நொறுக்கப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.

2002 இல் மோடி முதலமைச்சராக இருந்த, அகிம்சையின் தந்தை எனப் போற்றப்படும் காந்தி பிறந்த குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துப் பாசிஸ்டுகள் திட்டமிட்டு நடத்திய நரவேட்டையில் 3000 முஸ்லிம்கள் குரூரமாகக் கொல்லப்பட்டனர். அதற்கென மிக விகாரமான வழிகள் பின்பற்றப்பட்டன.

குஜராத் கலவரம் 2002 பெப்ரவரி 27 இல் தான் ஆரம்பித்தது. 2020 பெப்ரவரி 27 இல் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு டில்லிக் கலவரம் காவிப் பாசிஸ்டுகளால் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

காலனித்துவத்திற்குப் பிந்திய இந்தியாவின் வரலாறு இரத்தத்தால் எழுதப்படுகின்றது. ஜாதி, இன, மதக் கலவரங்களுக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் பஞ்சமில்லாத ஒரே நாடு இந்தியாவே என்ற இழுக்கை இன்று உலக அரங்கில் ஏற்படுத்தியமைக்கு அதிகாரத்திலுள்ள இனவெறியர்களும் காவிப் பயங்கரவாதிகளுமே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்றது.

இன்றைய உலக அரசியலில் அதிகாரத்தை கபளீகரம் செய்வதற்கு மூன்று வழிகளை மிலேச்சர்கள் கையாள்கின்றனர். அந்நியர்கள் பற்றிய பயம் (Xenophobia), இஸ்லாமியப் பீதி (Islamophobia), அப்பட்டமான பொய்கள் (Post-truth politics). டொனால்ட் ட்ரம்ப் முதல் நரேந்திர மோடி வரை இம்மூன்று தந்திரங்களையும் லாவகமாகக் கையாண்டு வருகின்றனர். மியன்மாரில் சூகியும் சீனாவில் சிங்பிங்கும் இதைத்தான் கையாள்கின்றனர்.

டில்லி கலவரத்தின் உண்மைப் பின்னணி இதுவே. மொகலாயர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாக இருந்த போது 1674 இல் சிவாஜி என்பவன் மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவினான். அன்றிலிருந்து இந்தியாவில் முஸ்லிம் விரோதமும் முஸ்லிம்களை அந்நியர்களாய்க் காட்டும் தந்திரமும் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது. இன்றைய மகாராஷ்திரா அன்றைய முஸ்லிம் விரோத இந்துத் தீவிரவாதிகளின் பயிற்சிக் களமாக மாறியது.

மராத்திய இயக்கத்தின் பிந்திய காலத்துக் குழந்தைகளே ராஸ்திரிய சிவசேன சங் (RSS), விஷ்வ இந்து பரிஷத் (VHP), பஜரங்தல், இந்து முன்னணி என்ற பல்வேறு பெயர்களில் தலைநீட்டின. கீகுகு இன் பண்பாட்டுப் பாசறையில் வளர்ந்த ஒருவர்தான் இன்றைய இந்தியப் பிரதமர்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அவர்களைப் பெரும்பான்மை மக்களின் எதிரிகளாகவும் அந்நியர்களாகவும் நிலைநிறுத்துவதன் மூலம் பெரும்பான்மையின் வாக்கு வங்கியைக் தக்க வைக்க முடியும் என்பதை பல ஆசிய நாட்டுத் தலைவர்கள் நம்பியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் பாரதத்தின் பிரதமர் எனப் போற்றப்படும் காவிப் பயங்கரத்தின் தலைவன் முஸ்லிம்களை நரபலி எடுக்கும் நரேந்திர மோ(ச)டி என்றால் அது மிகையாகாது.

சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் சஞ்சிகையின் அட்டைப் படம் சித்தரிப்பது போல் முஸ்லிம்களின் இரத்தத்தின் மீதும் மண்டையோடுகள் மீதும் ஆட்சியமைக்க விரும்புகின்றவனே மோடி.

மோடிக்குப் பிந்திய இந்தியா

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை இந்தியாவின் கலாசார சின்னங்களிலிருந்து நீக்கியமைதான் மோடியின் முதல் வேலையாக இருந்தது. 600 ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியின்போது நகரங்களுக்குச் சூட்டப்பட்ட முஸ்லிம் பெயர்களை நீக்குவதற்குத் தொடங்கினார் மோடி. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பாதிகாரத்தை ரத்துச் செய்தார் அவர். பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். இவை அனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழ்ந்து வரும் 200 மில்லியன் முஸ்லிம்களை வெறுமனே அவமானப்படுத்தும் செயலல்ல. அவர்களது அடையாளங்களையே துடைத்தழிக்கும் நாசகாரக் கொள்கை.

எல்லாவற்றுக்கும் உச்சமாக கடந்த டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் அரசியலமைப்புக்கு முரணான ஒரு காட்டுச் சட்டத்தை மோடி லோக் சபாவில் நிறைவேற்றினார். 1000 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தமது குடியுரிமையை நிறுவுவதற்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோருகிறது இந்தச் சட்டம்.

முஸ்லிம்களை வந்தேறு குடிகளாகவும் அந்நியர்களாகவும் காட்டி, இந்துக்களின் மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் அரசியல் லாபம் தேடலாம் என்ற கணக்கை சரியாகவே பார்க்கிறார் மோடி. இந்தச் சட்டத்தைப் பின்வாங்க வேண்டும் என்று டில்லியின் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பல இடங்களிலும் முஸ்லிம்கள் அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஓர் அரசு இயற்றும் அசாதாரண, அநியாயமான சட்டத்தை மக்கள் தமது அறிவாலும் ஒழுக்கத்தாலும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளவர்கள் என்பதை மக்கள் நிரூபிக்க முன்வந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆம் 15 ஆம் ஷரத்துக்களை கிழித்து வீசுவது போலவே மோடியின் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் வாழும் எந்தவொரு பிரஜையும் மதம், இனம், சாதி, மொழி எனும் எந்த வேறுபாடுகளாலும் பாராட்சம் காட்டப்படக் கூடாது. அவர்கள் அனைவரும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்றுக் கொள்வதில் சமத்துவமானவர்கள் என்று அரசியலமைப்புச் சட்டம் பறைசாற்றி நிற்க, காவிப் பயங்கரவாதிகள் அதனை கால்களின் கீழே போட்டு மிதித்து விட்டு, முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றினர்.

இதன் விளைவாகவே டில்லியின் புறநகர்ப் பகுதிகளான ஜாப்ராபாத், ஷஹின்பாக், சீலம்பூர் போன்ற இடங்களில் மக்கள் அணிதிரண்டனர். மோடியின் ஜனநாயக விரோத குடியுரிமைச் சட்டத்தை பாஜக. அரசாங்கம் பின்வாங்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கை. அதில் முஸ்லிம்கள் மட்டுமன்றி அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள் என முஸ்லிம் அல்லாதவர்களும் பெருமளவு கூடியிருந்தனர். அவர்கள் ஒரு நபரைக் கூடக் காயப்படுத்தவில்லை. எந்தவொரு கட்டடத்தின் மீதும் கல் எறியவில்லை. சாலையில் சென்ற எந்தவொரு வாகனத்தின் மீதும் ஒரு கீறல் விழவில்லை.

காலனித்துவத்திற்குப் பிந்திய இந்தியாவின் வரலாற்றில் மதம், இனம் கடந்து மக்களை அநியாயத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்த ஒரே நிகழ்வு இதுதான் என்கிறார் மனாஷ் பிராக் பட்டச்சாரி. இந்தியாவின் பிரபல அரசியல் எழுத்தாளர் இவர். ஆனால், மக்களுக்குள்ள கேள்வி கேட்கும் உரிமையையும் எதிர்த்து நிற்கும் ஜனநாயக வேட்கையையும் அவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட கலவரம் நொறுக்கிப் போட்டு விட்டது என்கிறார் அவர்.

கலவரம் திட்டமிடப்பட்டது

பா.ஜ.க.வின் தலைவரும் இந்தியாவின் உள்விவகார அமைச்சரும், தீவிர இந்துத்துவ வலது சாரி வெறியனும் என அறியப்பட்ட அமித் ஷா அவரது அரசாங்கம் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பில் மத்திய பிரதேசத்தில் நடந்த ஆதரவாளர்கள் கூட்டமொன்றில் பின்வருமாறு உரையாற்றினார்.

“இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் நாம் இச்சட்டத்தை அமுல்படுத்துவதிலிருந்து ஓர் எட்டையும் பின்வைக்க மாட்டோம். இந்நாட்டின் வந்தோறு குடிகளாக இருக்கும் துலுக்கர்களை (முஸ்லிம்களை) காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை விரட்டியடிப்போம். அவர்களைத் தேடித் தேடி அழிப்போம். இந்தியாவை விட்டு அவர்களை துரத்தியடிக்கும் வரை பா.ஜ.க. அரசாங்கம் அமைதியடையாது.”

டில்லி கலவரத்தின் அரசியல் சாரம்சம் இதுதான். மஹாராஷ்திராவில் பிறந்து வளர்ந்த இந்தக் காவிப் பயங்கரவாதம் 300 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று அதிகாரக் கட்டிலில் அமர்ந்துள்ளது. முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டி, மண்டையோடுகளைக் குவிப்பதன் மூலமேனும் இந்த அதிகாரத்தைத் தக்கவைப்பதே பி.ஜே.பி. காரர்களின் ஒரே இலக்கு. இதனால் அவர்கள் முழு இந்தியாவையும் கொழுத்துவதற்கும் சிறுபான்மைச் சமூகங்களின் இரத்தத்தை ஆறாய் ஓட்டுவதற்கும், எதற்கும் தயாராகியுள்ளனர்.

வாஜ்பேய், அத்வானி, பால்தாக்ரே, நரேந்திர மோ(ச)டி, அமித் ஷா, கபில் மிஷ்ரா என்று முஸ்லிம்கள் குறித்த எதிர்ப்புத் தீயை இந்துக்களின் உள்ளங்களில் கொழுந்து விட்டெரியச் செய்யும் கலை அவர்களுக்கு அத்துப்படி.

கலவரத்தின் தொடக்கம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மோடியின் அழைப்பை ஏற்று அஹ்மதாபாத்திற்கு வருகை தந்திருந்தார். அவரது வருகைக்கான முழுச் செலவு 170 கோடி இந்திய ரூபாய்கள். மில்லியன் கணக்கான மக்களை ஒன்று திரட்டிய மோடி, ட்ரம்பிற்கு அளித்த வரவேற்பு போன்று இந்தியாவின் அரசியல் வரலாற்றில் வேறெந்த வெளிநாட்டுத் தலைவருக்கும் வழங்கப்படவில்லை. இரு தலைவர்களும் தங்களை மாறி மாறிப் புகழ்ந்தனர். போதாக் குறைக்கு அகிம்சையின் தந்தை என அறியப்பட்ட காந்தியின் உருவச் சிலைக்கு முன்னால் இவ்விரு கொலைகாரர்களும் கைகூப்பி வணங்கினர்.

ட்ரம்ப் விமானத்தில் ஏறியதும் டில்லியில் கலவரம் தொடங்கியது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரா கபில் மிஷ்ரா அமைதி வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஷஹின்பாக்கிற்கு அருகில் தனது சிவசேனை வெறியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு இங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம். ட்ரம்ப் நாட்டை விட்டுச் செல்லும் வரையே நாம் பொறுமையாக இருப்போம். அமைதியாக இவர்கள் வீடு செல்லாவிட்டால் வன்முறையின் மூலம் நாம் பதிலளிப்போம். முன்னரும் நாம் இப்படியான பதிலுரைகளை வழங்கியிருக்கின்றோம்” என்று வெளிப்படையாகவே தமது ஆதரவாளர்களைக் கலவரத்தில் இறங்குமாறு அவர் தூண்டுதல் அளிக்கும்போது, பக்கத்தில் டில்லி பொலிஸ் உயர் அதிகாரிகள் நின்றுகொண்டிருந்தனர்.

கலவரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மிஸ்ராவைக் கைதுசெய்திருந்தால் இந்தக் கலவரமே மூண்டிருக்காது என்கிறார் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவரான எஸ் முரளீதர்.

கபில் மிஸ்ராவின் இந்த உரையைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் அடிமட்ட கெடுபிடிகளும் முஸ்லிம் விரோத கொலை வெறியர்களும் களத்திற்கு வந்தனர். அவர்களின் கைகளில் கூரிய ஆயுதங்கள் இருந்தன. முஸ்லிம் அடையாளங்களோடு முன்னால் தோன்றிய ஒவ்வொருவரையும் அவர்கள் தாக்கத் தொடங்கினர். இதுவரை 52 பேர் இந்து வெறியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

டில்லி பொலிசாரின் இயலாமை அல்லது ஆற்றாமைதான் இந்தக் கலவரம் இவ்வளவு பரவுவதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. ஆனால், அது இயலாமை அல்ல. இன்றைய இந்தியாவின் காவல் துறை முழுக்கவும் காவி மயமாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின்போது அவர்கள் இந்து வெறியர்களின் பக்கமே நிற்கின்றார்கள். 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்தக் கலவரத்தில் 650 பேர் வரை கடும் காயத்திற்கு உட்பட்டுள்ளனர்.

சர்வதேச ஊடங்கங்கள் நரேந்தி மோ(ச)டியின் முகத்தில் காறி உமிழ்கின்றன. லண்டனிலிருந்து வெளிவரும் காடியன் கலவரத்திற்கு மோடியே பொறுப்பேற்க வெண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளது. டைம்ஸ் மோடியை ஒரு இரத்தம் குடிக்கும் காட்டேறியாக அட்டைப் படத்தில் சித்தரித்துள்ளது.

1984 இற்குப் பின்னர் டில்லி சந்தித்த மிக மோசமான கலவரம் இது என்று கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உயிரிழப்பு, சொத்திழப்பு என்பவற்றுக்கு அப்பால் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், பண்பாட்டு நிறுவனங்கள் என்பன இக்கலவரத்தின்போது திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அசோக் நகரிலுள்ள சில ஜும்ஆ பள்ளிகள் கொழுத்தப்பட்டு நாசமாக்கப்பட்ட பின்னர் அவற்றின் மினாராக்களில் இந்துக் கொடிகளைத் தொங்கவிட்டுள்ளனர்.

டில்லியின் வடகிழக்குப் பகுதி எங்கும் முஸ்லிம்களின் கடைகள், வியாபார நிறுவனங்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளன. வாகங்கள் கொழுத்தப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாடின்றி கண்ணுக்குத் தென்பட்ட அனைவரையும் கொலை வெறி கொண்டு அலையும் குண்டர்கள் தாக்கினர். குஜராத்தில் 2002 இல் அரங்கேறிய அதே காட்சிகளே இன்று டில்லியின் நடக்கின்றது.

பல நம்ப முடியாத நெஞ்சைப் பிளக்கின்ற, இதயங்களை உடைத்துப் போடுகின்ற சம்பவங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன. திருமணம் முடித்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இரண்டு மாதக் குழந்தையை கற்பில் சுமந்த இளம் தாயின் வயிற்றில் ஓர் இந்து வெறியன் உதைத்ததில் அவர் அங்கேயே உயிரிழந்தார். ஒரு 19 வயது இளைஞனின் தலையில் டிரில் கருவியினால் துளையிடும் காட்சி உலக மனச்சாட்சியை ஒரு கணம் உலுக்கியது. இன்னொரு முஸ்லிமைச் சூழ நூற்றுக்கணக்கான காவிப் பயங்கரவாதிகள் புடைசூழ்ந்து உயிர் போகும் வரை அவரைத் தாக்கும் சம்பவம் நெஞ்சை நெகிழ வைக்கின்றது. மத வெறியும் இன வெறியும் எவ்வளவு குரூரமானவை என்பதை டில்லியின் இன்றைய காட்சிகள் நிறுவிக் கொண்டே செல்கின்றன.

கலவரத்தின் பின்னாலுள்ள பாசிஸத் தத்துவம்

முஸ்லிம்கள் அந்நியர்கள். அவர்களது ஆட்சியின்போது இந்தியாவுக்குப் படையெடுத்தவர்கள். கோயில்களைக் கொள்ளையடித்தவர்கள். அவர்கள் அந்நியர்கள். இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள். சுருக்கமாக பாபஷாப் அம்பேத்கர் ஒரு முறை சொன்னது போல Lawlesness against straingers is lawful  என்பதுதான் நரேந்திர மோடியினதும் அவரது காவிப் பயங்கரவாதிகளினதும் பாசிஸத் தத்துவம். அதுவே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாக வெடித்துள்ளது.

பொய்களை வைத்து அரசியல் செய்யும் நரேந்தி மோ(ச)டியின் காவிக் கும்பல் கலவரத்தில் மொழிந்த ஒரே கோஷம் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பதுதான். பிபிசி செய்தியாளர் அதனை is a murder cry   என சரியாகவே வர்ணித்துள்ளார். மதத்தை, மத வெறியை மக்களைக் கொன்று குவிப்பதற்குப் பயன்படுத்தும் ஒரே தலைவர் நரேந்திர மோடிதான் என்பதை டில்லிக் கலவரம் சுட்டுகின்றது. ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைக் காப்பாளர் அஸ்மா ஜஹாங்கிர் சொன்னது போன்று அதிகாரத்தைத் தக்க வைக்க எண்ணும் மோடி போன்றவர்களுக்கு கலவரங்கள் மட்டும்தான் இந்தியச் சூழலில் இருக்கின்ற ஒரே மூலதனம்.

About the author

Administrator

Leave a Comment