உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான அரசின் வட்டியில்லாக் கடன் திட்டம் – கல்வியாண்டு 2019/2020

69

நாட்டின் அபிவிருத்திக்கான மனிதவள முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தேவையான மனித வளங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் (NSHEI)  கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு அவர்களது கல்விக்கான தொகையை வட்டியில்லாக் கடனாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக மாணவர்கள் செலவழிக்கும் அந்நியச் செலாவணியைக் குறைப்பதற்கும் அதற்குப் பதிலாக உள்ளுர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் இதன் மூலம் நாடுகிறது.

இந்தத் திட்டத்தின்படி உயர்கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட துறைகளில் அதிகக் கேள்வியுள்ள துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு  உச்சபட்சமாக 800,000 ரூபா வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக ஏற்படும் செலவுகளுக்கென உச்சபட்சமாக 300,000 ரூபாவையும் மாணவர்களின் தேவைக்கேற்ப வட்டியில்லாக் கடனாகப்  பெற்றுக் கொள்ள முடியும். நான்கு வருடம் அல்லது ஐந்து வருடக் கற்கையை நிறைவு செய்த பின்னர், ஒரு வருட காலத்தின் பின்னிருந்து ஏழு அல்லது 08 வருடங்களுக்குள் எடுத்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். அதாவது கற்கை நெறியைப் பூர்த்தி செய்த ஒரு வருட காலத்தின் பின்னரே அவர் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் காலம் ஆரம்பிப்பதால் ஒரு வருட காலத்துக்குள் தொழிலொன்றைப் பெற்று அதிலிருந்து கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியும்.

2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளின் உயர்தரப் பரீட்சைகளின் அடிப்படையில் மூன்று பிரவேசங்கள் (Intake) இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டின் உயர்தரப் பரீட்சைகளின் முடிவுகளின் அடிப்படையில் இம்முறைய பிரவேசங்கள் அமையவுள்ளன. இதன்படி அரச சார்பற்ற 12 பல்கலைக்கழகங்களில் 70 பட்டப் படிப்புக்களை உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு அங்கீகரித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும்.

அனுமதிகள் குறிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலுள்ள இடத்தைப் பொறுத்தே அமையும். மேலதிகமான விண்ணப்பங்கள் கிடைக்குமிடத்து Z புள்ளிகள் கவனத்தில் எடுக்கப்படும். ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சாதாரண சித்தி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மூன்று தடவைகளுக்குள்ளால் இந்தச் சி்த்தி பெறப்பட்டிருக்க வேண்டும். தெரிவு செய்யும் பல்கலைக்கழகங்களின் பாடநெறிக்கேற்ப இதில் மாற்றங்கள் இருக்க முடியும். பொது அறிவுப் பரீட்சையில் 30 வீதத்துக்கு மேல் புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். பொது அறிவுப் பரீட்சையில் 30 வீதத்துக்குக் குறைவாகப் பெற்று Z புள்ளிகளின் அடிப்படையில் கற்கை நெறிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர். அனைவருக்கும் ஒரு வாய்ப்பே வழங்கப்படும். கற்கை நெறி முழுநேரக் கற்கை நெறியாக இருக்க வேண்டும். அரச பல்கலைக்கழகங்கள், அரச உயர்கல்வி நிறுவனங்கள், கல்வியியற் கல்லூரிகளில் ஏற்கவே அனுமதிக்கபட்டவர்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. SLIATE  இல் உயர் தேசிய டிப்ளோமா பயில்பவர்கள், NAITA  வின் IET இல் NDES பயில்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. UNIVOTEC இன் கீழ் வருகின்ற பல்கலைக்கழகங்களில் மூன்று வருட கற்கை நெறிகளைப் பயில்பவர்களும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. ஏற்கனவே அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருப்பவர்கள், முழு நேரமாக தொழில் செய்பவர்கள், ஏற்கனவே பட்டதாரி பட்டம் பெற்றவர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.

இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள்

i. Sri Lanka Institute of Information Technology Guarantee Ltd- SLIIT

ii. Aquinas College of Higher Studies – Aquinas

iii. National School of Business Management- NSBM

iv. CINEC Campus (Private) Limited- CINEC

v. Sri Lanka Institute of Buddhist Academy -SIBA

vi. Institute of Chartered Accountants of Sri Lanka- ICASL

vii. SANASA Campus Ltd- SANASA

viii. Horizon College of Business and Technology Ltd – HORIZON

ix. KAATSU Highly Advanced Medical Technology Training Centre -KIU

x. SLT Campus (Pvt) Ltd., – SLTC

xi. SAEGIS Campus (Private) Limited– SAEGIS

xii. Esoft Metro Campus (Pvt) Ltd., -ESOFT

இந்தக் கடன் திட்டத்தின் கீழான கற்கை நெறிகள்

தகவல் தொழில்நுட்பத் துறை, உயிரியல் விஞ்ஞானம், பொறியியல், வணிகம், மானுட மற்றும் சமூக விஞ்ஞானம்

தகவல் தொழில்நுட்பத் துறை

SLIIT, Aquinas,SIBA,NSBM, Horizon, SAEGIS, ESOFT

உயிரியல் விஞ்ஞானம்

SLIIT, Aquinas, CINEC, KIU,

பொறியியல்

NSBM, SLTC

வணிகம்

SLIIT, ICASL, NSBM,CINEC,SANASA, HORIZON,KIU,SLTC, SAEGIS

மானிட மற்றும் சமூக விஞ்ஞானம்

SLIIT,NSBM,CINEC,HORIZON

  • Humanities and Social Science
ப.கழகம் பாடநெறி மொழிமூலம் காலம் தகைமை கடன்
SLIIT B Ed Hon – Physical Sc English 4 3s in Maths/Science 800,000
  B Ed Hon – Bio Sc English 4 3 s in Biology/Agri 800,000
  B Ed Hon – Eng English 4 3s any stream with English 800,000
NSBM BA in Business com. English 3 3s in Any subject 600,000
CINEC BA in Eng English 3 3s in Any Stream with Eng 600,000
  BA Hon in English English 4 3s any tream with Eng 800,000
  B Ed Hon. in Eng English 4 3s in any stream with eng 800,000
  B Ed Hon in Phy.Science English 4 3s in Maths 800,000
  B Ed Hons in IT English 4 3s in any Stream 800,000
  B Ed Hons in Bio Sc English 4 3s in Bio Sc 800,000
HORIZON B Ed in Bio Sc English 4 3s in Bio 800,000
  B Ed in Phy Sc English 4 3s in Maths 800,000
  B Ed Hon in Eng English 4 3s in any stream with English 800,000
           
  • commerce
ப.கழகம் பாடநெறி மொழிமூலம் காலம் தகைமை கடன்
SLIIT BBA Sp/Hons English 4 3s in any stream 800,000
ICASL Bsc in applied Accounting English 4 3s in any stream 800,000
NSBM B of Magmnt Hons English 4 3s in any stream 800,000
  Bsc in Bus. Management English 4 3s in any stream 800,000
CINEC B of mngmnt in supply chain Hons English 4 3s in any stream 800,000
  BM Hons in Tourism & Hospit. English 4 3s in any stream 800,000
  BM Hon in Retail Marketing&Branding English 4 3s in any stream 800,000
  BM in HRM English 4 3s in Com. stream 800,000
  BM Hon in Bus.Mgmt English 4 3s in Com.stream 800,000
  BM Hons in Industrial Mgmt English 4 3s in Com.stream 800,000
  Bsc in Indust.Maths English 4 3s in Physical.Sc 800,000
  B of Bus.mgmt Hons in Banking&Finance English 4 3s in Physical Sc 800,000
SANASA Bsc Sp in Banking & Fin English 4 3s in any Stream 750,000
  Bsc Sp in Regional Sc & Planning English 4 3s in any stream 750,000
  Bsc Sp in Insurance & Risk management English 4 3s in any Stream 750,000
HORIZON BM Hon in Marketing English 4 3s in com.Stream 800,000
  Bsc in Bus.magmt HRM English 4 3s in com stream 800,000
KIU BM Hons in Marketing English 4 3s in any stream 800,000
  BM Hons in HRM English 4 3s in any stream 800,000
  BM Hons in Account. English 4 3s in any stream 800,000
SLTC B of Bus.Mgmnt Hon in Marketing Mngmnt English 4 3s in com.stream 800,000
  B of Bus.mgmnt Hon in supply chain mgmt English 4 3s in Com.stream 800,000
  B of Bus.mgmnt Hons in Operations English 4 3s in com.stream 800,000
  B of Bus.mgmnt Hon in Accounting&Fin. English 4 3s in Com.Stream 800,000
  B of Bus.mgmnt Hon in HRM English 4 3s in com.stream 800,000
  Bsc Hons in Travel & tourism mgmnt English 4 3s in any subject 800,000
  Bsc Hon in ETourism & Digital Marktng English 4 3s in any stream 800,000
SAEGIS BBA English 3 3s in com stream 590,000
           

03. Biological Science Stream

ப.கழகம் பாடநெறி மொழிமூலம் காலம் தகைமை கடன்
SLIIT Bsc Hon in Bio Tech English 4 3s in Bio Sc/Tech 800,000
AQUINAS Bsc in Agro ind.mgmt English 4 3s in Bio Science 650,000
CINEC Bsc Hon in Bio Sc English 4 3s in Bio Sc/Tech 800,000
  Bsc Hon in Ind. pharmaceutical Sc. English 4 3s in Bio Sc/Tech 800,000
  Bsc Hon in Cosmetic Science English 4 3s in Bio sc/Tech 800,000
KIU Bsc in Bio Science English 4 3s in Bio Stream 800,000
  Bsc Hon in Psycology English 4 3s in any subject 800,000
  Bsc in Medical Sc. in Acupuncture English 4 3s in Bio Stream 800,000

04. Engineering & Technology

ப.கழகம் பாடநெறி மொழிமூலம் காலம் தகைமை கடன்
NSBM B of Interior Design English 3 3s in any stream 600,000
  Bsc Hons in computer System engineering English 4 3s in Phy.science 800,000
SLTC Bsc Hon in Engineering in Electronics Power sys. English 4 3s in physics science 800,000
  Bsc Hon in Eng, Electronics&Telecom English 4 3s in physics. 800,000
  Bsc Hon in Eng in Electronic&Eng.mgmt English 4 3s in physics  
  Bsc Hons in Eng &ICT English 4 3s in comb. maths 800,000
  Bof Technology Hons in Electronics English 4   800,000
  Bsc Hon in Engineering Mechatronics English 4 3s in physical science 800,000
  B of Technology Hon in Agri.Techs English 4 3s in Phys.science 800,000

05. Information and Communication Technology Stream

ப.கழகம் பாடநெறி மொழிமூலம் காலம் தகைமை கடன்
SLIIT Bsc in Information English 4 3s in any Stream 800,000
AQUINAS BIT English 3 3s in any stream 456,000
SIBA Bsc in IT English 3 3s in any stream 580,000
NSBM Bsc Hon in Computer Network English 4 3s in Phys. Science 800,000
  Bsc Hon in Comp.Sc. English 4 3s in Physical Sc 800,000
  Bsc in Software Eng. English 4 3s in Physical Sc 800,000
  Bsc in MIS Sp English 4 3s in any stream 800,000
  Bsc in Multi Media English 4 3s in any subject 600,000
HORIZON Bsc in IT English 4 3s in any subject 800,000
  BIT Hon in Networking and Mobile computing English 4 3s in any subject 800,000
SAEGIS BIT English 3 3s in any Subject 590,000
ESOFT BIT English 4 3s in any subject 800,000
CINEC Bsc in Software Eng. English 4 3s in Physical Sc. 800,000

மேலதிக விபரங்களை www.studentloans.mohe.gov.lk

ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். விபரங்கள் தமிழில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டாலும் இணையத்தளத்தில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே விபரங்கள் உள்ளன. விண்ணப்பிப்பதற்கான இறுதி்த் திகதி 23.03.2020