உலக செய்திகள் சிறப்புக்கட்டுரைகள்

ஜூம்ஆ மற்றும் கூட்டுத் தொழுகைகள் நிறுத்தப்பட்டமை இஸ்லாத்தின் வழிகாட்டல் அடிப்படையிலா?

Written by Ahsan Ariff

கலாநிதி அஹ்மத் ரய்ஸுனி

######

ஜும்ஆ தொழுகை மற்றும் கூட்டுத் தொழுகையை நிறுத்துவது தொடர்பாக வந்துள்ள மார்க்கத் தீர்ப்புக்கள் குறித்து பிழையான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி அஹ்மத் ரைஸ}னி அவர்கள் விளக்கங்களை வழங்கியுள்ளார். அவற்றின் சாராம்சத்தை இங்கு முன்வைக்கிறோம்.

ஜும்ஆ மற்றும் கூட்டுத் தொழுகைகளை நிறுத்துவது குறித்து கூறப்பட்டுள்ள தீர்ப்பானது அல்குர்ஆன், சுன்னாவிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்பட்டதாகும். இஸ்லாத்தில் உயிரைப் பாதுகாத்தலின் அவசியத்தை அல்குர்ஆனும் ஹதீஸும் மிகவும் வலியுறுத்துகின்றன.

அல்லாஹு தஆலா அல்குர்ஆனின் பின்வருமாறு குறிப்பிடுகிறான். : (உங்களை நீங்களே ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள். நன்மைகளையே புரிந்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்) -ஸுறா பகரா-195.

நபி (ஸல்) கூறினார்கள், : யாருக்கும் தீங்கிழைக்க வேண்டாம். தீங்கிழைத்தமைக்காக தீங்கிழைக்கவும் வேண்டாம்.

இவை எவ்வகை தீங்காயினும் அது இடம்பெற முன் தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

இறைதூதர் (ஸல்) கூறினார்கள். (யார் இந்த மரத்திலிருந்து (வெள்ளைப்பூடு) உண்கிறாரோ அவர் எமது மஸ்ஜிதை நெருங்காதிருக்கட்டும்).

இந்த ஹதீஸ் வெறும் துர்வாசனையை தொழுகையாளிக்கு கொண்டு சேர்ப்பதையே தடுக்கிறது என்றால், மரணத்தை ஏற்படுத்தும் நோயை கொண்டு சேர்ப்பதை எப்படி கருத வேண்டும். அபாயம் அதிகரிக்கும் போது தொழுகையை நிறுத்துவது இங்கு அவசியமாகிறது.

மார்க்கத்தின் பாதுகாப்பை விட உயிரின் பாதுகாப்பை முற்படுத்தி விட்டதாக சிலர் வாதிடுகின்றனர்.

மார்க்கம் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு உள்ளது. தொழுவதையோ, திக்ர் செய்வதையோ இங்கு யாரும் தடுக்கவில்லை. அதான் சொல்வதையும் யாரும் தடுக்கவில்லை.

இன்றைய சூழலில் கூட்டுத் தொழுகை நிறுத்தப்படுவது மார்க்கத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாகும். இவ்விடயத்தில் கூட தொழுகைதான் அடிப்படையாக பார்க்கப்பட்டுள்ளது.

தற்காலிக இந் நடவடிக்கையினால் மார்க்கம் ஒருநாளும் இல்லாமல் போய்விடாது. இறைமன்றாட்டம் குறிப்பிட்ட ஒரு இடத்துடன் இணைக்கப்படவில்லை. அதான் ஷரீஆவின் தனித்துவத்துடன் தொடர்ந்தும் இருக்கும். அதானை நிறுத்துவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. தனித்துத் தொழ விரும்புவர்களுக்கு மஸ்ஜிதுகள் திறந்து வைக்கப்பட முடியும்.

ஹஜ்ஜைப் பொறுத்தவரையிலும் அவ்வாறுதான். கொரோனா பரவலின் தீவிரத்தைப் பொறுத்து அதனை நிறுத்துவது பற்றியும் யோசிக்கலாம்.

இச்சோதனையானது சமயங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. இஸ்லாம் ஆரோக்கியத்தின், சுத்தத்தின், ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தின் மார்க்கமாகும். இஸ்லாமிய சமயத்தால் இப்படியான தொற்றுநோய்ப் பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்பது இப்போது தெளிவாகிறது. இஸ்லாமிய ஷரீஆ சமயத்தை பாதுகாப்பதுடன் உடல்களையும் பாதுகாக்கிறது என்பது உறுதியாகிறது.

இந்நோயை இறைவின் கோபமாக சித்தரிக்க முனைபவர்களின் கருத்து நிராகரிக்ககட வேண்டும். தொற்றுநோய்கள் இறை நியதிகளின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன. இதனை இறைவனின் கோபத்துடன் மாத்திரம் சுருக்குபவர்கள் இறைவன் மீது இட்டுக்கட்டுகிறார்கள். இறைவனின் ஞானத்தையும் அவனின் நாட்டதையும் யாராலும் அறிந்து கொள்ள முடியாது.

About the author

Ahsan Ariff

Leave a Comment