உள்நாட்டு செய்திகள்

கஷ்டமான காலங்களில் நடந்து கொள்வது எப்படி.

Written by Ahsan Ariff

எம்.என் முஹம்மத் .
ஆசிரிய ஆலோசகர் (களுத்துறை கல்வி வலயம்), இளைஞர் பயிற்றுவிப்பாபர்.

கொடிய வைரஸ் வாழ்க்கையில் பலருக்கு நம்பிக்கை இழக்க செய்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்தில் பலர் உறந்து போயுள்ளனர். நாங்கள் உரிய முறையில் கையாண்டால் எல்லா சவால்களையும் வெற்றி கொள்ள முடியும். இந்த இக்கட்டான கட்டத்தில் எம்மை ஒழுங்கு படுத்திக் கொள்வதற்காக சில ஆலோசனைகளை முன்வைக்கின்றேன்.

01. நேரான மனப்பான்மையுடன் வாழுங்கள்( Positive mind) இந்த கஷ்டம் தற்காலிகமானது. இது எமது வாழ்வை ஒழுங்கு படுத்துவதற்காக இறைவனால் தந்த ஒரு அரிய சந்தர்ப்பமாக நினைத்து பயன்படுத்துங்கள். வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை அடைவதற்காக இறைவன் தந்த ஒரு வழிமுறையை இது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

02. வித்தியாசமாக சிந்தியுங்கள்( Creative thiking ) வருமான குறைவின் போல் எவ்வாறு செலவை குறைத்துக் கொள்ளலாம் என்பதையும். பிள்ளைகளுக்கு கஷ்டமான காலங்களில் வாழ்வதற்கு பழகுவதற்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றி அச்ச படுவதைவிட அந்த எதிர்காலத்தை எவ்வாறு வெற்றிகரமாக அடையலாம் என்பதை சிந்தியுங்கள். இந்த சந்தர்ப்பத்தை ஓய்வு எடுப்பதற்கு பயன்படுத்தாதீர்கள் இது உங்கள் வாழ்க்கையில் இன்னொரு படியை அடைவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

03. வாழ்க்கையில் இறைவன் தரும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் எமக்கு அனுபவங்கள் ஆகும். இந்தக் கடினமான கஷ்டத்தில் கைக்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் ஒரு புது விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள். எந்த மனிதன் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்கிறானோ அவன் எதிர்காலத்தை வெற்றி கொள்வான்.

04. மாறிக் கொள்ளுங்கள், கஷ்டமான சூழ்நிலையை வெற்றி கொள்வதற்கு மிகவும் அடிப்படையான விடயம் அந்த கஷ்டமான சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வதாகும். சில விடயங்களுக்காக கஷ்டப்பட வேண்டி ஏற்படும் ஆனால் இயல்பில் நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எனவே மாற்றம் என்பது ஒரு மனிதனின் அபிவிருத்தி என்பதை தெளிவாக விளங்கி செயல்படுங்கள்.

05. உயர்வுடன் நடந்துகொள்ளுங்கள் இல்லாத நேரத்தில் மக்களுக்காக செலவு செய்யுங்கள். ஒரு மனிதன் அடையும் உயர்ந்த ஆத்ம திருப்தி அவன் கஷ்டமான காலத்தில் கொடுக்கும் தர்மங்கள் ஆகும். பதற்றம் அடையாமல் உங்களிடம் அன்பை எதிர்பார்ப்பவர்களுக்கு உரிய அன்பைக் கொடுங்கள். பொருளாதாரத்தில் ஏற்படும் கஷ்டம் எங்களை நிலைகுலையச் செய்யக்கூடாது.

06. காலத்தின் சூழ்நிலையை விளங்கி செயற்படுங்கள் இந்த காலத்தில் பெரிய முதலீடுகளையும், கட்டிடங்கள் கட்டுவது போன்ற பெரிய செலவுகளையும் செய்து விடாதீர்கள். அது சிலநேரம் உங்களை பெரிய கஷ்டத்தில் தள்ளிவிடும் எப்போதும் இது முடியும் இது முடியாது என்பதை தெளிவாக விளங்கி செயற்படுங்கள்.

07. கஷ்டங்கள் எவ்வளவு காலம் என்றாலும் அதனை எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கையுடன் செயல்படுங்கள். இப்போது இருப்பதை விட பெரிய கஷ்டம் சில நேரம் முன்னால் வர முடியும் என்ற எதிர்பார்ப்புடன் திட்டமிடுங்கள். அப்போது மலை போல் சவால்கள் வந்தாலும் உங்களால் இலகுவாக வெற்றி கொள்ள முடியும்.

08. உங்களை மட்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டாம். மொத்த நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதில் ஆர்வம் கொள்ளுங்கள். அது உங்களை தனிமைப்படுத்தும் இருந்து பாதுகாப்பதோடு ,சுற்றுப்புற சூழலின் சவால்கள் குறையும்போது உங்கள் சவால்களும் இலகுவாக குறையும் என்பதை விளங்கி செயற்படுங்கள்.

09. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக சிந்தித்து புதிய நல்ல பழக்கங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவதை விட்டும் தவிர்ந்து அந்த நேரத்தை ஆரோக்கியமா எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை திட்டமிடுங்கள். இது ஓய்வெடுப்பதற்கான நேரமில்லை ,இது எம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அடுத்த பணியை தெரிவு செய்வதற்கான காலம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

10. அடுத்தவர்களை மன்னியுங்கள் அனேகமான குறைகளை கண்டு கொள்ளாதீர்கள். கஷ்டமான காலங்களில் மனிதர்களுக்கு தொழிற்பட தெரியாது என்பதை விளங்கி செயற்படுங்கள். அவர்களது தவறுகளை காலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள் எப்போதும் நாங்கள் அடுத்தவர்களை மன்னிக்கும் போது நாங்களும் மன்னிக்கப்படும் என்பதை தெளிவாக விளங்கி செயல்படுங்கள்.

About the author

Ahsan Ariff

Leave a Comment