உள்நாட்டு செய்திகள்

சட்டத்தை மீறிய 790 பேர் கைது

Written by Ahsan Ariff


தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் பரவுதல் பிரச்சினையை தவிர்ப்பதற்காக நாடு முழுதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒன்று சேர்கின்ற சந்தர்ப்பங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளமையே இதற்கான காரணமாகும்.
இருந்தும் இந்த சட்டத்தை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிந்த 790 பேர் அளவில் நாடு பூறாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்தோடு 150க்கும் அதிகமான வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

About the author

Ahsan Ariff

Leave a Comment