Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

மத்திய கிழக்கில் இந்துத் தீவிரவாதிகளுக்கான பதிலடி இலங்கைக்குச் சொல்லும் செய்தி

Written by Administrator

லதீப் பாரூக்

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வளைகுடாவின் ஆளுந்தரப்புகள் உட்பட அனைவரும் இந்துத்துவ தீவிரவாத தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரத் தொடங்கியுள்ளனர். இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகைளைக் கட்டவிழ்த்துவிடும் இனவெறி அரசியல்வாதிகளுக்கு இது ஒரு தெளிவான செய்தியாகும். ஏனெனில், ஆண்டு தோறும் 7 பில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுத் தருகின்ற வளைகுடாவில் உள்ள சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் தொழிலை இது பாதிக்கும்.

வளைகுடாவில் உள்ள இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வன்முறை ஆர்எஸ்எஸ் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆதரிப்பதை அங்குள்ள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வளைகுடாவில் மிகவும் வெற்றிகரமான இந்தியத் தொழிலதிபர்கள் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா படைகளுடன் நெருக்கமான உறவைப் பேணி அவர்களுக்கு நிதியுதவி அளித்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரியில் டெல்லி முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் வன்முறையை ஏற்பாடு செய்ததிலிருந்து வளைகுடா முழுவதும் இந்தத் தாக்குதல்களுக்கு பரவலான விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்களின் தெளிவான விபரங்கள், படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களில் பரப்பப்பட்டன. சில இந்தியத் தொழிலாளிகள் வட்ஸ்அப், ஹேஷ்டேக் மற்றும் பிற சமூக ஊடக குழுக்களில் இந்தச் செய்திகளை நிரப்பிப் பரப்பத் தொடங்கியபோது, இந்த இந்துத்துவ தீவிரவாதிகளை வெளியேற்றுமாறு மக்கள் கட்டாயப்படுத்தத் தொடங்கினர். உதாரணமாக சவூதி அறிஞர் ஷேக் ஆபிதி ஸஹ்ரானி, வெறுப்பைப் பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக குற்றச் செயல்களைப் புரிகின்ற இந்து வன்முறையாளர்கள் வளைகுடாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மத்திய கிழக்கில், குறிப்பாக வளைகுடாவில் உள்ள அரசாங்கங்கள், தீவிரவாத இந்துத்துவ சிந்தனையுடன் உடன்படும் எவரையும் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். Send Hindutva Back Home என்ற தலைப்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் ஷேக் ஸஹ்ரானி இட்டுள்ள பதிவில், இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்துக்கும் எதிராக வெறுப்புணர்வைப் பரப்பி வரும் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் பணிபுரிகின்ற அனைத்து வன்முறை இந்துக்களையும் வளைகுடாவிலிருந்து வெளியேற்றுமாறு வேண்டிக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான ஆளும் பாஜகவின் அணுகுமுறைகளை கத்தார் விமர்சன ரீதியாக அவதானிக்கத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களை வெறுப்பதையும் அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதையும் நீங்கள் தொடர்ந்தால், நாங்கள் உங்களை கத்தாரிலிருந்து வெளியேற்றுவோம் என கத்தாரைச் சேர்ந்த அப்துல் காதர் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமோபோபிய அணுகுமுறைகளுக்கும் அரசாங்கத்தினதும் அதன் புகழ்பாடிகளினதும் கருத்துக்களுக்கும் எதிராக விமர்சனரீதியாக டுவீட் செய்யும் முக்கிய நபரான ஷார்ஜா ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த வணிகப் பெண்மணியான இளவரசி ஹிந்த் அல் காசிமி தனது டுவிட்டரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பகிரங்கமாக இனவாதத்தை வெளிப்படுத்தும் எவரும் தண்டிக்கப்பட்டு வெளியேற்றப்படுவர் என எச்சரித்திருக்கிறார்.

வளைகுடா தழுவிய இந்த எதிர்ப்புக்களுக்கு உடனடியாகப் பதிலளிக்கும் வகையில், வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் ஆறு நாடுகள் இணைந்து, அனைத்து ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகளையும் கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றுமாறு தமது நாடுகளின் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளன. பொலிசார் விடுத்துள்ள கூட்டு அறிக்கையில், அன்பர்களே, வளைகுடா நாடுகளிலிருந்து சமூக ஊடக பதிவுகள் மற்றும் கருத்துக்களை ஊக்குவிக்கும் பல ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து வளைகுடா ஒப்பந்த நாடுகளிலும் கிளைகளை அமைத்துச் செயல்படுகின்றனர். பெரும்பாலான கிளைகள் ஓமானில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜிசிசி நாடுகளில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகளினால் பரப்பப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புச் செய்திகள் பல உள்ளன. இதுபோன்ற வெறுக்கத்தக்க செய்திகளை நீங்கள் கண்டால் தயவு செய்து பொலிசிடம் முறைப்பாடு செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு (OIC) இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமோபோபியாவை நிறுத்தவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழான கடப்பாடுகளின்படி துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

வருடந்தோறும் வளைகுடா நாடுகளில் இருந்து 55 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையும், அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் இருந்து 120 பில்லியன் டொலருக்கு அதிகமான தொகையையும் இந்தியா வருமானமாகப் பெறுகின்றது. வளைகுடா நாடுகளில் மட்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். இந்த நாடுகளில் இந்தியர்கள் (பெரும்பாலும் இந்துக்கள்) சிறப்பாக நடத்தப்படுகிறார்கள்.

இதற்குப் பகரமாக இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அல் நாசர் எழுதுகிறார்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு வகையான வன்முறைகளை பல கொடூரமான வீடியோக்கள் மூலமாக நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறோம். பெப்ரவரி டெல்லிக் கலவரத்தின் போது அதிகரித்து வரும் இஸ்லாமோபோபியா உச்சத்தை எட்டியதால் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. முஸ்லிம்கள் தமது உயிர், சொத்து, செல்வம், குடும்பங்களை இழந்துள்ளனர்.

முஸ்லிம்களை எதிர்மறையாகச் சித்திரிப்பதையிட்டும், இந்தியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்று வெடித்ததில் இருந்து ஊடகங்கள் முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்குவதையிட்டும் இந்திய ஊடகங்களை ஓஐசி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்திய முஸ்லிம்களுக்காக ஒருங்கிணைந்து எழுந்து நிற்கவும், அவர்கள் தமது சொந்த இடங்களில் பாதுகாப்பை உணர்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் நாம் அனைத்து இஸ்லாமியத் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறோம் என அவர் எழுதியுள்ளார்.

அரபுப் பெண்கள் குறித்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் அவதூறான டுவீட் அவரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந்த டுவீட் இப்போது நீக்கப்பட்டிருந்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த அரபுப் பெண் நூரா அல் குரைர் பாஜக பாராளுமன்ற உறுப்பினரின் டுவீட்டின் ஸ்கிரீன் ஷொட்டை வெளியிட்டார். இவரது வளர்ப்பைப் பற்றி அனுதாபப்பட்டுள்ள அவர், அரபு நாடுகளில் அவருக்கு வரவேற்பில்லை, அவர் இங்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சூர்யாவின் இழிவான கருத்துக்கு இந்திய அரசாங்கமும் நாடாளுமன்றமும் உடனடியாக பொறுப்புக் கூற வேண்டும் என அரபு மக்கள் கோருகின்றனர்.

நாடு தழுவிய போராட்டங்களுக்கு வழிவகுத்த பாரபட்சமான குடியுரிமைத் திருத்தச் சட்டம் (2019), 2020 பெப்ரவரியில் தேசிய தலைநகரில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் என்பவற்றின் நெருங்கிய நிலைக்கு இது வந்துள்ளது. பல்வேறு காரணங்களையும் முன்வைத்து முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் பாகுபாடுகளும் கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. ஆளும் பாஜக தலைவர்களும் சங்கபரிவார் பெரியவர்களும் இந்த மோசமான தாக்குதல்களுக்கு பெரும்பாலும் வழிவகுத்திருக்கிறார்கள். இந்த நேரங்களில் உயர்தலைமைகள் பெரும்பாலும் அமைதி காத்தே வந்திருக்கின்றன.

அரபு ஊடகங்கள் சமீப காலங்களில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை விரிவாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுவதைக் கண்ட ஆப்கானிஸ்தான் முதல் துருக்கி மற்றும் அரபுலகம் வரையான பலரும் சமூக ஊடகங்களில் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல அரேபியர்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். தங்களது கோபத்தை டுவிட்டர் வழியாக வெளிப்படுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அடங்கிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் பரவலாக்கி வருகின்றனர்.

டெல்லி வன்முறைகளின் படங்களையும் செய்திகளையும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள குவைத் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் பஹத், மிருகத்தனமான படுகொலைகள், குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் என அவற்றை வர்ணித்திருப்பதோடு, அரபு உலகத் தலைவர்கள் இதில் தலையிட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் சம உரிமை பெறத் தகுதியற்றவர்கள் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி சமீபத்தில் வழங்கிய பேட்டியை அரபு மொழி ஊடகங்கள் அரபியிலான உப தலைப்புக்களுடன் வெளியிட்டன. இந்த வீடியோ பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களால் வெகுவாகப் பகிரப்பட்டன.

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்திய முஸ்லிம்களைத் தூஷிப்பதும், பெண்களை பலாத்காரம் செய்வதாக அச்சுறுத்துவதுமான உணர்ச்சியைத் தூண்டும் இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவுகளை இடுவதுமே பல அரபு நாடுகளை குறிப்பாகச் சீண்டியுள்ளது. தற்பொழுதும் பகிரப்படும் பழைய டுவீட்டுகளில், சிவலிங்கமாகிய கஃபாவை (மக்காவில் உள்ள முஸ்லிம்களின் புனித ஆலயம்) மீட்டெடுக்க வேண்டும் என்கின்ற இந்துக்களின் முன்னைய பிரச்சாரத்தை ஒட்டிய சுப்ரமணியம் சுவாமியின் டுவீட்டும், பாஜக எம்பியின் தற்போது அழிக்கப்பட்டுள்ள டுவீட்டும் முக்கியமானவை.

வளைகுடாச் சமூகங்களுக்கு ஏன் ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் விடுக்கிறது என்ற இந்தியாவின் முஸ்லிம் மிரரில் வந்த கட்டுரையில், ஆர்எஸ்எஸ் இந்துக்கள் பல வளைகுடா நாடுகளில் இரகசிய இராணுவ முகாம்களை நிறுவுகிறார்கள். அதில் அவர்கள் இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்களை விதைக்கிறார்கள். முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து வேரறுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பிராமணர்களின் கடமைகளும் அதற்கான அர்ப்பணிப்பும் நினைவூட்டப்படுகின்றன. அவர்களில் பலர் இந்திய உளவு நிறுவனமான ரோவுக்காக தகவலறிபவர்களாகவும் இருக்கின்றனர். அரசு மற்றும் வணிகம் தொடர்பான முக்கியமான தரவுகளை அணுகக்கூடியவர்கள் அவற்றை இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் முதலாளிகளுக்கு அனுப்புகிறார்கள். வளைகுடாவில் ஆர்எஸ்எஸ் நடத்தும் இந்திய வணிகங்களையும் அவை ஊக்குவிக்கின்றன. இந்த உயர்சாதி ஆர்எஸ்எஸ் இந்துக்கள் முஸ்லிம்களை அழுக்காகக் கருதி தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன.

அவர்களது இனவாத நெஞ்சங்களில், அரேபியர்கள் நாகரிகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள், வன்முறை மதத்தைப் பின்பற்றுபவர்கள், பெண்களை ஒடுக்குபவர்கள், ஏமாற்றுக்காரர்கள். இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ஸை பலப்படுத்துவதற்கும், உள்ளுர் சமூகங்களை ஒழுக்கரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழிக்கவும் பணம் சம்பாதிப்பதே வளைகுடாவில் அவர்கள் இருப்பதன் நோக்கம்.

ஒழுங்கமைக்கப்பட்ட இந்து பாசிச பயிற்சி பெற்ற உயர்சாதி இந்துக்கள் தங்கள் சமூகத்தில் இருப்பது தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதை வளைகுடா தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் ஏதேனும் ஒரு உயர்சாதி ஆர்எஸ்எஸ் இந்துக்களின் உதவியைப் பெற்று ரோவின் உதவியுடன் அதன் கைப்பொம்மை அரசாங்கத்தை நிறுவும் திறன் ஆர்எஸ்எஸ்ஸுக்கு இருக்கிறது.

இஸ்லாமும் முஸ்லிம்களும் இஸ்லாமோபோபிக்களிடமிருந்து தப்பிக்க முடியும். ஆனால் வளைகுடா சமூகம் ஆர்எஸ்எஸ்ஸின் சதிகளையும் திட்டங்களையும் திறம்பட எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. ஆர்எஸ்எஸ்ஸுக்கு விசுவாசமாக இருக்கும் உயர்சாதி தீவிரவாத இந்துக்களை வளைகுடா தலைமைகள் வடிகட்டுவதற்கான நேரம் இது.

வளைகுடாவில் மக்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். பாரம்பரிய, காலாவதியான, பழங்குடி ஆட்சித் தலைவர்கள் தமது இருப்புக்கான அச்சுறுத்தலைப் புரிந்து கொள்வார்களா ?

இங்கே இலங்கையில் முஸ்லிம்களைத் தாக்கும் இனவாதிகள் வளைகுடாவில் மக்களின் மாறிவரும் மனோநிலையைப் புரிந்து கொள்வார்களா ? 

About the author

Administrator

Leave a Comment