உலக செய்திகள் சர்வதேசம்

கொரோனா காலத்தில் சவூதியில் விவாகரத்து 30 வீதத்தால் அதிகரிப்பு

Written by Administrator

கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து பெப்ரவரி மாதத்தில் மட்டும் சவூதியில் விவாகரத்து 30 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக கல்ப் நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது திருமணங்கள் 5 வீதத்தால் அதிகரித்துள்ளன. பதிவு செய்யப்பட்ட 13000 திருமணங்களில் 542 ஒன்லைன் மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 7482 விவாகரத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தக் காலப்பிரிவில் நிகழ்ந்த விவாகரத்துக்களில் பெண்களால் விவாகரத்து கோரப்படும் குல்உ முறையிலான விவாகரத்துக்கள் அதிகமாக உள்ளன. உத்தியோகங்களில் ஈடுபட்டுள்ள பெண்கள், வியாபாரத்தில் முன்னணியில் உள்ள பெண்கள், பெண் வைத்தியர்கள் என சமூகத்தின் முன்னணிப் பெண்மணிகள் இவர்களுள் அடங்குவர். கொரோனா காலப்பிரிவில் தமது கணவருக்கு வேறு குடும்பங்கள் இருப்பது தெரிய வந்தமையே இதற்கான காரணம் என கல்ப் நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment