உலக செய்திகள் சர்வதேசம்

ரோஹிங்கியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மலேசியா மறுப்பு

Written by Administrator

ரோஹிங்கிய அகதிகளைத் தாங்கி வந்த அபலைப் படகொன்று மலேசியாவின் மேற்குக் கரையில் கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இடைமறிக்கப்பட்டதை அடுத்து, ரோஹி்ங்கிய அகதிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என மலேசியா அறிவித்துள்ளது.

சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி பங்கு கொள்ளும் மியன்மார் அரசாங்கத்தினால் 2017 இல் துரத்தியடிக்கப்பட்டு பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்த ரோஹிங்கிய முஸ்லிம்களை மலேசியா அகதிகளாக ஏற்று வந்தது. ஆனாலும் தற்போது கொரோனா பரவலைக் காரணம் காட்டி அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு மலேசியா மறுத்து வருகிறது.

இந்த வகையில் கடந்த வாரம் நாட்டுக்குள் நுழையும் போது இடைமறிக்கப்பட்ட 269 பேர்களுடன் கூடிய ரோஹிங்ய அகதிகள் படகினை அது பங்களாதேஷின் கொக்ஸின் பஸார் மாவட்டத்திலிருந்து வந்தவர்களாக அறியப்படும் பட்சத்தில் பங்களாதேஷுக்கே  திருப்பி அனுப்பவுள்ளதாக மலேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் தெரிவித்துள்ளார்.

உடைந்த நிலையில் மலேசியா வந்து சேர்ந்த படகில் பெப்ரவரியில் 700 – 800 பேர் பயணித்ததாகவும் மலேசியாவில் அது இடைமறிக்கப்பட்ட போது 269 பயணிகளுடன் ஒரு பெண்மணியின் சடலமும் காணப்பட்டதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

About the author

Administrator

Leave a Comment