பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது கவனிக்க வேண்டியவை

68

உலகின் மிக அவசரகால நிலைமையாக வெளிப்படுத்தப்பட்ட கோவிட் 19 வைரஸ் பரவிய ஆபத்தை அடிப்படையாகக் கொண்டு உடனடியாகச் செயற்படும் வண்ணம் இலங்கையின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் 2020 மார்ச் 13 தொடக்கம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்நாட்டின் நாற்பத்தைந்து லட்சத்துக்கு அண்மித்த பாடசாலை மாணவர்களுக்கு தமது வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாயிற்று.

கல்வி அமைச்சினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது கோவிட்-19 தொற்று நோயி லிருந்து இலங்கை பாடசாலை மாணவர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படிமுறையாகவே ஆகும். அதன்படி மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பயனுள்ளதென இந்நாட்டின் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். மூன்று மாதத்துக்கு அண்மித்த காலப்பகுதியின் பின்னர் நாட்டின் அனைத்துத் துறைகளையும் படிப்படியாகச் செயற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பினை முறையாகக் கடைப்பிடித்து பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் செயற்பாட்டை கீழ்க்காணுமாறு அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1.0 பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் செயன்முறை

  தயாராகும் கட்டம் (முதலாம் வாரம்) முதலாம் கட்டம் (இரண்டாம் வாரம்) இரண்டாம் கட்டம் (மூன்றாம் வாரம்) மூன்றாம் கட்டம் (நான்காம் வாரம்)
நோக்கம் பாடசாலையை சுகாதர பாதுகாப்பான இடமாக, கற்றல் கற்பித்தல் செயன் முறைக்காகத் தயார்ப்படுத்தல் அண்மையில் பரீட்சைக்கு முகங்கொக்கவுள்ள மாணவர் தொகுதியினருக்கு பாடத்திட்டத்தை விரைவாகப் பூர்த்தி செய்தல் இரண்டாவதாக முன்னுரிமை கொண்ட பரீட்சைகளுக்கு முகங் கொடுக்க வுள்ள மாணவர் தொகுதியினருக்கு பாடத் திட்டத்தைப் பூர்த்தி செய்தல் வருடத்தில் எஞ்சியிருக்கும் மட்டுப்படுத்தப் பட்ட காலப்பகுதி யில் பாட உள்ளடக்கத்தை உச்சமான வகையில் பூர்த்தி செய்தல்
அழைக்கப் படும் தொகுதி யினர் அதிபர் உள்ளிட்ட முகாமைத்துவ குழு/ அனைத்து ஆசிரியர்கள்/ கல்வி சாரா ஊழியர்கள் தரம் 13, 11 மற்றும் 5 தரம் 12 மற்றும் 10 தரம் 9, 8, 7, 6, 4 மற்றும் 3
ஆரம் பித்தல் ஜூன் 29 – ஜூலை 3 ஜூலை 06 – ஜூலை 17 ஜூலை 20 – ஜூலை 24 ஜூலை 27
 • தரங்கள் 1 மற்றும் 2 இனை ஆரம்பித்தல் கால நிலவரங்களைக் கவனத்திற் கொண்டு பின்னர் அறியத் தரப்படும்.

2.0 கடைப்பிடிக்க வேண்டிய விசேட விடயங்கள்

2.1 பாடசாலைகளை சுகாதாரப் பாதுகாப்பாகத் தயார்ப்படுத்தல்

 • கல்வி அமைச்சினால் 2020.05.11 வெளியிடப்பட்ட இல.15/2020 தாங்கிய கொவிட்-19 பரவுதலைத் தவிர்க்கப்பதற்காக பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களைத் தயார்செய்தல் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்ட நியமங்களையும் வழிகாட்டலையும் கடைப்பிடித்து பாட சாலையை சுகாதார பாதுகாப்பான இடமாக தயாரித்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 • மேற்குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிட்ட அறிவுரைகளின்படி மாகாண மட்ட சுகாதார மேம்பாட்டு குழுவொன்றினை நியமிப்பது கட்டாயமாகாது என்பதோடு உரியவாறு குழுக் கூட்டங்களை நடாத்தி முன்னேற்றம் தொடர்பாக அறிக்கைகளைப் பேணி வைத்துக் கொள்ள வேண்டும்.
 • மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருதல் மற்றும் பாடசாலையிலிருந்து வெளியேறுதலை ஏற்புடையவாறு முகாமைத்துவம் செய்தல் வேண்டும்.
 • பாடசலை மீண்டும் ஆரம்பித்ததன் பின்னர் பாடசாலையோடு சம்பந்தப்படும் வெளிநபர்களின் பெயர்ப் பட்டியல் அதிபரினால் முறையாகப் பேணப்படுதல் வேண்டும்.
 • அதிபர்/ மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் மாணவ மாணவியரின் போக்குவரத்து வசதி தொடர்பாக கவனத்திற் கொண்டு தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதோடு, அந்தத் தீர்மானம் சம்பந்தமாக கல்வி அமைச்சுக்கு அறியத் தரப்பட வேண்டும்.
 • பாடசாலை விடுதிகளுக்குள் மாணவர்களை உள்வாங்குதல் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டியதோடு அது தொடர்பான அனைத்துப் பொறுப்புகளும் அதிபர் வசமானதாகும்.

2.2 கற்றல் – கற்பித்தல் செயற்பாடும் வகுப்பறை முகாமைத்துவமும்

 • வகுப்பறையில்/ கற்கும் சூழமைவில் 25 மாணவர்களுக்குக் குறைவான மாணவர் குழுவினரை உள்ளடக்குமாறு தயாரிக்கப்பட்ட நேரசூசிக்கு அமைய கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.
 • மாணவரை குழுவாக்குவதன் காரணமாக ஏற்படும் மேலதிக சமாந்திர வகுப்புகளில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியதாக நேரசூசிகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
 • அதற்கமைய ஆசிரியர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முறைப்படி ஒப்படைத்தல் வேண்டும்.
 • மாணவர்களின் இடைவெளியை உறுதி செய்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உகந்தவாறு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். (நாற்காலி மற்றும் மேசைகளை வைத்துக் கொள்ளல், தூர இடைவெளியை அடையாளமிட்டுக் கொள்ளல்/ காற்றோட்டம்)
 • பாடசாலையிலுள்ள அனைத்து வகுப்பறைகளையும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காகப் பாவித்துக் கொள்ளல் வேண்டும்.
 • அது போல, பாடசாலையின் பொது கற்பித்தல் இடங்களைத் தெரிந்து (பிரதான மண்டபம்/ மாநாட்டு மண்டபம்) பரிந்துரைக்கப்பட்ட தூர இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட நேரசூசியின் படி அதிக மாணவர் தொகையினருக்கு ஒரே நேரத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம்.
 • மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு அனுகூலமாகுமாறு கற்றல் கற்பித்தல் செயற்பாடு கள் (கருத்தரங்கு/ மீட்டல் வகுப்புகள்) உரிய சுகாதார நியதிகளுக்கு ஏற்றவாறு நடாத்தப் பெற வேண்டும்.
 • யாதேனும் மாணவர் / மாணவி சுகயீன நிலைமையைக் காட்டினால் அந்த மாணவர்/ மாணவியரை பிணியாளர் அறைக்கு அனுப்புவதோடு உடனடியாகப் பெற்றோரை அழைத்து ஒப்படைக்க வேண்டும். அந்த மாணவன்/ மாணவி மீண்டும் பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டியது பூரண குணமடைந்த பின்னரே ஆகும்.

2.3 பாடசாலை நேரம்

  தரம் பாடசாலை நேரம்
1 3,4 மு.ப. 7.30 – மு.ப. 11.30
2 5 மு.ப. 7.30 – மு.ப. 12.00
3 6,7,8,9 மு.ப. 7.30 – மு.ப. 1.30
4 10,11,12,13 மு.ப. 7.30 – மு.ப. 3.30

2.4 பாடசாலை இடைவேளை

 • பாடசாலை இடைவேளை நேரம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காதவாறு மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதிபரின் தற்றுணிவு மற்றும் பாடசாலைக்குப் பொருத்தமானவாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

2.5 பாடசாலைத் தவணைப் பரீட்சை

 • இரண்டாம் பாடசாலை தவணைக்குள் தவணைப் பரீட்சைகளை ஏற்பாடு செய்துகொள்ளக் கூடாது. என்றாலும் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு செயன்முறைக்கான மதிப்பீடுகள் நடைமுறைப்படுத்தப்படலாம்.

2.6 திருத்தப்பட்ட பாடசாலை தவணை அட்டவணை 2020

 • இரண்டாம் தவணை: 2020 ஜூலை 06 திங்கள் தொடக்கம் 2020 செப்டம்பர் 04 வெள்ளி வரை (இரு தினங்களும் உள்ளடங்கலாக)
 • மூன்றாம் தவணை: 2020 ஒக்டோபர் 05 திங்கள் தொடக்கம் 2020 நவம்பர் 27 வெள்ளி வரை (இரு தினங்களும் உள்ளடங்கலாக)

2.7 க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை

 • 2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 07 தொடக்கம் அக்டோபர் 02 வரை நடைபெறும்.
 • 2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதி ஞாயிறு நடைபெறும்.

2.8 பாடசாலை பொது இடங்களைப் பயன்படுத்தல்

 • ஆய்வுகூடம், நூலகம், அழகியல் பிரிவு அறை, கணணிக் கூடம் அன்றாடம் கிருமியழிப்புக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 • மாணவர் தலைவர்கள் அறை, மாணவர் படையணி அறை, சாரணர்/சாரணியர் அறை, விளையாட்டுகளுக்காக வழங்கப்பட்ட அறை உள்ளிட்ட மாணவர்கள் பயன்படுத்துகின்ற பிறிதும் இணைப்பாட விதானச் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்குரிய அறைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

2.9 வைபவம் மற்றும் கூட்டம் நடத்தல்

 • எந்த வகையிலும் வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தல் மறு அறிவித்தல் வரை மேற்கொள்ளக் கூடாது. என்றாலும் பாடசாலை அன்றாடம் மாணவர் கூட்டம் இடைவெளியைப் பேணி பொருத்தமான இடத்திலோ அல்லது உள்ளக ஒலிபரப்பு முறையைப் பயன்படுத்தியோ நடத்தப்பட முடியும்.

2.10 விளையாட்டு மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்

 • விளையாட்டு உபகரணங்களைத் தொடுதல் மற்றும் இடைவெளியைப் பேணுவதற்குச் சிரமமான யாதேனும் விளையாட்டுக்களை மீண்டும் அறியத் தரும் வரை நடத்தக் கூடாது. (சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுரை கடிதத்தின் தலைப்பு 6 மற்றும் 7 உறுப்புரைகளுக்கு அமைய)
 • என்றாலும் மாணவர்களின் உடல் மற்றும் உள நல்நிலைக்காக காலை சரீர நலனுக்காக வேலைத் திட்டத்தில் இடைவெளியைப் பேணிக் கொண்டு மேற்கொள்ள இயலுமானவரை சந்தர்ப்பங்கள் வழங்க வேண்டும்.
 • தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடும் வீர வீராங்கனைகளுக்கு தமது உடல் தகுதியினைப் பேணிக்கொள்ள சுகாதார பாதுகாப்பு முறைகளை கைக்கொண்டு பயிற்சி பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
 • இந்த வருடத்தில் நடத்துவதற்கு உத்தேசித்த அனைத்திலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டி மற்றும் பாடசாலை விளையாட்டுச் சங்கத்தினால் நடத்தப்படும் போட்டிகள் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி மற்றும் பல நிறுவனங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் மீண்டும் அறியத் தரும் வரை நிறுத்தப்பட்டுள்ள.
 • சாரணர், சாரணியர், மாணவர் படையணி, சௌக்கியதான, செஞ்சிலுவை, சென். ஜோன்ஸ் அம்புலென்ஸ் உள்ளிட்ட வெளியார் ஏற்பாட்டில் நடத்தப்படும் இணைப்பாட விதானச் செயற்பாடுகள் மீண்டும் அறியத் தரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

3.0 பொது அறிவுரைகள்

3.1    பிரதேச மட்டத்தில் உருவாகக் கூடிய பிரச்சினைகள் மற்றும் சிரமங்களைக் கவனத்திற் கொண்டு மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை அந்தந்த மாகாணத்துக்கு மற்றும் பாடசாலைக்கு ஏற்புடையவாறு ஆக்கிக் கொள்ள மாகாண கல்விப் பணிப்பாளர்/ அதிபர்களுக்கு அதிகாரம் உண்டு.

3.2    மேற்குறித்த முறைமைகளுக்கு அப்பாலான சந்தர்ப்பங்களில் மாகாண பாடசாலையாயின் உரிய மாகாண கல்விப் பணிப்பாளருக்கும், தேசிய பாடசாலையாயின் தேசியபாடசாலைகள் பணிப்பாளருக்கும் அறிக்கையிட வேண்டும்.

எச்.எச்.எம். சித்திரானந்த – கல்விச் செயலாளர்