உலக செய்திகள்

ஐநா பாதுகாப்புக் கவுன்ஸிலில் இந்தியா

Written by Administrator

2021-2022 காலப்பிரிவுக்கான ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்ஸிலின்  நிரந்தரமற்ற உறுப்பினராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த 192 வாக்குகளில் 184 வாக்குகளைப் பெற்று இந்தியா தெரிவாகியுள்ளது.

இந்தியாவுக்குக் கிடைத்த அதிகப்படியான வாக்குகள் பாதுகாப்புச் சபையைப் பலப்படுத்துவதில் இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக அங்கத்தவராக 1946 முதல் அங்கம் வகிக்கும் இந்தியா ஐநாவின் பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கான நிரந்தரமற்ற அங்கத்தவராக 8 ஆவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சிறுபான்மையினர் மீது இந்திய அரசு மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலேயே இந்தத் தெரிவு நடைபெற்றிருக்கிறது.

இதேவேளை 130 வாக்குகளுடன் நேபாளமும் 128 வாக்குகளுடன் அயர்லாந்தும் இம்முறைய பாதுகாப்புக் கவுன்ஸிலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கென்யாவும் மெக்ஸிக்கோவும் பாதுகாப்புக் கவுன்ஸிலுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடுகளாகும்.

About the author

Administrator

Leave a Comment