உலக செய்திகள்

213000 இந்தியர்களுக்கும் இம்முறை ஹஜ் வாய்ப்பில்லை

Written by Administrator

இம்முறை ஹஜ்ஜுக்கு வெளிநாட்டவரை அனுமதிப்பதில்லை என்ற சவூதி அரசாங்கத்தின் முடிவினால் இம்முறை ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்த 213,000 இந்தியர்களில் எவருக்கும் ஹஜ் செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்க மாட்டாதென இந்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இம்முறை இந்தியர்கள் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பில்லை என சவூதி அரசாங்கத்தின் ஹஜ் உம்ரா அமைச்சர் கலாநிதி முஹம்மத் ஸாலிஹ் பின் தாஹிர் தனக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும் சவூதி அரசின் முடிவுக்கு தான் மதிப்பளிப்பதாகவும் அமைச்சர் நக்வி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கடந்த வருடம் இந்தியாவில் இருந்து இரண்டு இலட்சம் பேர் ஹஜ்ஜில் கலந்து கொண்டனர். இவர்களில் 50 வீதம் பெண்களாவர். இம்முறை விண்ணப்பித்துள்ள 213000 பேருக்கும் அடுத்த வருடம் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இம்முறை அவர்கள் செலுத்திய தொகை அனைத்தையும் முழுமையாக திருப்பி வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செவ்வாய்க்கிழமை (23) முதல் நடைபெற்று வருகின்றன. 

About the author

Administrator

Leave a Comment