உலக செய்திகள்

கொரோனா முடியும் வரை சவூதி விசா இல்லை

Written by Administrator

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி முடிந்த பின்னரே சவூதிக்கு வெளியே இருக்கும் வெளிநாட்டினருக்கான வெளியேற்றம் மற்றும் மறுநுழைவுக்கான விசாக்களை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்படும் என சவூதியின் பாஸ்போர்ட் திணைக்களம் (ஜவாஸாத்) அறிவித்துள்ளது.

சவூதிக்கு வெளியே உள்ள தமது வெளியேற்றம் மற்றும் மறுநுழைவு (Exit and Re entry visa) வீசாக்கள் காலாவதியாகியுள்ள வெளிநாட்டவர்கள் பலரும் முன்வைக்கின்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பாஸ்போர்ட் திணைக்களம் இத்தகவலை டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான சேவைகள் வழமைக்குத் திரும்பியதும் மீண்டும் சவூதிக்குள் வருவது பற்றி வினவுகின்றனர். கொரோனா தொற்று முடிவடைந்ததன் பின்னர் மறு நுழைவுக்கான விசா நடைமுறைகளைப் பேணி அவர்கள் நாட்டுக்குள் வர முடியும் என பாஸ்போர்ட் திணைக்களத்தின் டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment