உள்நாட்டு செய்திகள்

சாத்தான்குளத்தில் வேதமோதும் சாத்தான்கள். பொலிஸ் வன்முறைக்கெதிராக போர்க்கொடி

Written by Administrator

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தைக்கும் மகனுக்கும் நீதி வேண்டிய கோரிக்கைகள் இந்தியாவில் வலுத்து வருகின்றன. Justice for Jeyaraj and Fenix  என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் பிரபலமடைந்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம். பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாவது துயரம் மிக்கது எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கடையை அதிக நேரம் திறந்து வைத்திருந்தமைக்காக சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட தந்தையும் மகனும் பொலிஸ் காவலில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும் பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அங்கே அவர்கள் உயிரிழந்ததாகவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கட் வீரர் சிக்கர் தவான் …இதற்கெதிராக நாம் குரலெழுப்ப வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபல சினிமா இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் இந்தியாவின் பொலிஸ் வன்முறைக்கெதிராக குரலெழுப்பி வருகின்றனர்.

About the author

Administrator

Leave a Comment