உலக செய்திகள் சர்வதேசம்

குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்

Written by Administrator

‘‘இந்திய மக்கள் தொகையில் 48% பெண்கள். ஆனாலும் அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக இன்னும் சமத்துவம் கிடைக்கவில்லை. இந்தியாவில் 80 சதவீத ஆண்கள் கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள்.

பெண்களோ 65 சதவீதம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை இங்கே மிகக் குறைவு…’’ என்கிறது சமீபத்திய ஆய்வுதவிர, குழந்தை வளர்ப்புக்காக 40 சதவீத பெண்கள் தாங்கள் பார்த்து வந்த வேலையை விடுகின்றனர். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி உள்ளிட்ட இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் வேலை செய்யும் பெண்களிடம் ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.

குழந்தையைக் கவனித்துக்கொள்வது, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதுதான் பெண்கள் வேலையை விட முதன்மையான காரணம்.
இதுபோக குழந்தைத் திருமணம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்குட்பட்ட 2.39 லட்சம் பெண் குழந்தைகள் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர்.

About the author

Administrator

Leave a Comment