உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் சுகாதார விதிகளைப் பேணும் அதிகாரம் பிஎச்ஐயிடம்

Written by Administrator

சுகாதார விதிகளைப் பேணி தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ள ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக சுகாதார விதிகளுக்கிணங்க தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டல்கள் ஒழுங்குவிதிகளாக வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்ததும் அந்த வழிகாட்டல்கள் சட்டம், ஒழுங்குகளாக மாறி விடும். இந்தச் சட்டம் ஒழுங்குகள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரமும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment