உள்நாட்டு செய்திகள்

சிறுவர் படைப்பிரிவு தொடர்பில் கருணா விசாரிக்கப்பட வேண்டும் – ஐ.நா.

Written by Administrator

சிறுவர்களைப் படையில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் எல்ரிரிஈ முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும்  சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றச் செயலொன்றை இவர் புரிந்துள்ளார் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்ரிரிஈயின் முன்னாள் தலைவராகவும் இலங்கை அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராகவும் விளங்கிய கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்தும் விசாரணைகளை அவதானித்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

பொறுப்புக் கூறல் என்பது இலங்கையின் அனைவருக்கும் பொதுவானது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment