சாரதி அனுமதிப்பத்திரம் 06 மாதம் வரை நீடிப்பு

12

இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் மார்ச் 16 முதல் ஜூன் 30 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஆறு மாத காலத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஜூலை 01 முதல் செப்டம்பர் 30 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் மேலும் மூன்று மாதங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.