பேராசிரியர் ஜயந்த தனபால ராஜினாமா

4

அரசியலமைப்புப் பேரவையிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கான பேராசிரியர் ஜயந்த தனபாலவின் கடிதத்தை அரசியலமைப்புப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது.

தனது சுகவீனத்தைக் காரணம் காட்டி அவர் வரைந்துள்ள இராஜினாமாக் கடிதத்தில் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக கண்டியில் இருந்து கொழும்புக்கு வருவதால் உள்ள போக்குவரத்துக் கஷ்டங்களையும் குறி்ப்பிட்டிருந்தார்.

19 ஆம் திருத்தத்தின் படி இதற்குப் பதிலாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். எனவே பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னரே புதிய நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.