உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பம்

Written by Administrator

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் அனைத்தும் நாளை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாளை ஆரம்பமாகும் முதல் கட்டத்தில் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பாடசாலைக்குச் சமுகமளிப்பர் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்திரானந்த தெரிவித்தார்.

தொற்று நீக்கம் செய்தல், சுத்தப்படுத்தல், பாடங்களுக்கான நேர அட்டவணை தயாரித்தல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 06 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் தரம் 05, 11, 13 மாணவர்கள் பாடசாலைக்குச் சமுகமளிப்பர் எனவும் அவர் தெரிவித்தார்.

தரம் 10, 12 மாணவர்கள் மூன்றாம் கட்டமாக ஜூலை இல் அழைக்கப்படுவர். முதலாம் இரண்டாம் தர மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் ஜூலை 27 ஆம் திகதி அழைக்கப்படுவர்.

பின்னர் மீண்டும் செப்டம்பர் 04 முதல் ஒக்டோபர் 04 வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

About the author

Administrator

Leave a Comment