உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகள் 6 பேர் நியமனம். 19 பேர் இடமாற்றம்

Written by Administrator

பாதாள உலக போதைபொருள் வியாபாரியான ரன்கொத் படிகே சஞ்சீவ சம்பத் என அழைக்கப்படும் கெடவளபிட்டிய சம்பத் கம்பஹா பகுதியில் பொலீஸார் இன்று காலை (ஜூன் 26) மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது..

பலியாகிய பாதாள உலக குற்றவாளியான குறித்த நபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனரத்ன தெரிவித்தார்.

கம்பஹா மிரிஸ்வத்தையிலுள்ள மல்வத்து ஹிரிபிடிய பொலிஸ் சோதனை சாவடியில் சந்தேக நபரால் பொலீசார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தின்போதே இவர் பலியாகியுள்ளார்.

இமேவேளை சிறைச்சாலை சேவைகளின் தேவைகருதி உடனடியாக செயற்படும் வண்ணம் 19 சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதேவேளைஇ பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்படும் மோசமான நிலை உருவாகிவருவதுடன்இ இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பிரதம சிறைச்சாலை அதிகாரிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து போதைபொருள் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை அறியப்பட்டது.

சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்படும் குற்றச்செயல்கள் மற்றும் பாதாள உலக போதைபொருள் செயற்பாடுகளை நாட்டிலிருந்து இல்லாதொழித்து சிறைச்சாலை செயற்பாடுகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் எதிபார்ப்புக்கமைய அண்மையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment