உள்நாட்டு செய்திகள்

ஹமீத் ரிஸ்வான் குடும்பத்துக்கு பாதுகாப்பு அமைச்சு சன்மானம்

Written by Administrator

கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஹமீத் ரிஸ்வான் குடும்பத்துக்கு பாதுகாப்பு அமைச்சு சன்மானம் வழங்கி கௌரவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் வெள்ளியன்று (26) நடைபெற்ற சம்பவத்தில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) கமல் குணரத்ன, ஹமீத் ரிஸ்வானின் மனைவி சிவான் மேரி தெரேசாவிடம் 500,000 ரூபாவுக்கான காசோலையை கையளித்தார்.

குறித்த பெண்ணைக் காப்பாற்றிய ஏனைய இரு பொலிசாருக்கும் சன்மானமும் சான்றிதழ்களும் இந்த வைபவத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

இம்மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து 780,000 பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்ட போது கொள்ளையர்களைக் கைது செய்ய உதவிய பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

About the author

Administrator

Leave a Comment