உள்நாட்டு செய்திகள்

பஸ் பயண வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை முதல்

Written by Administrator

மேல் மாகாணத்தில் பஸ் பயண வீதி ஒழுங்கைச் சட்டத்தின் மூன்றாம் கட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளை (29) காலை 6.00 மணி முதல் கொழும்பு இங்குருகட சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இந்த வீதி ஒழுங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆமர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி நடைமுறைப்படுத்தப்படும்.

பஸ் பயண ஒழுங்கைச் சட்டத்தின் முதலாவது கட்டம் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் இரண்டாம் கட்டம் பொரள்ளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் அமுலாகின்றது.

About the author

Administrator

Leave a Comment