குடும்பம்-உளவியல்

சிரிக்கும்போது உடலில் சுரக்கும் இரசாயனம்

Written by Administrator

நாம் சிரிக்கும் போது நமது மூளையில் ஒரு வகை இரசாயனம் சுரக்கின்றது. அதன் பெயர் என்டோர்பின் (Endorphin). இது உடலுக்கு இயற்கையான வலி நிவாரணத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் வழங்குகின்றது. மகிழ்ச்சியை அதிகரிக்கும் சுரப்பிகளை உடலில் அதிகம் சுரக்க வைப்பதற்கு சிரிப்பு உதவுகின்றது என சமீபத்திய ஆய்வொன்று கூறுகின்றது. இதனால் மன அழுத்தம் குறைந்து உடல் தளர்வடைகின்றது.

உடலைப் பலவீனமாக்கும் அங்கைலோ ஸ்பொன்டிலிக்ஸ் என்ற நோயால் ஓர் அமெரிக்கர் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது பெயர் நோர்மன் கசின். இந்நோயால் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் ஒவ்வொருவரும் அவருக்குத் தங்களால் உதவ முடியாது என்று கைவிரித்து விட்டனர். இறப்பதற்கு முன்னர் நோர்மன் கசின் கடும் வலியால் சித்திரவதைக்கு உள்ளாகி பின்னர் இறந்துபோய் விடுவார் என்று எதிர்வு கூறிச் சென்றனர்.

ஆனால் அவருக்கு ஓர் உளவியலாளர் அதிகம் சிரிக்குமாறும் சற்று மகிழ்ச்சி உணர்வில் இருக்கு மாறும் ஆலோசனை வழங்கினார். அதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து அங்கைலோ ஸ்பொன்டிலிக்ஸ் எனும் அந்நோய் குணமடையக் கூடும் என்று ஆலோசனை வழங்கினார்.

கசின், மருத்துவர்களின் எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாமல் ஹோட்டல் அறையொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு மார்க்கல் சகோதரர்கள், மூன்று அடிமைகள் போன்ற திரைப்படங்களையும் வாடகைக்கு வாங்கினார். சார்லி சப்லினின் நகைச்சுவைக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்தார். இவ்வாறு ஆறு மாதங்களாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டார். பின்னர் அவரது உடலைச் சோதனையிட்டபோது நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து அவரது நோய் முற்றிலும் குணமாகி இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நோர்மன் கசின் இந்த அற்புதமான அனுப வத்தை ஒரு நோயின் கதை என்ற நூலில் எழுதியுள்ளார். அந்நூலுக்கு சிரிப்பு ஒரு மருந்தாக என்ற உபதலைப்பையும் அவர் இட்டுள்ளார். 1979 இல் வெளிவந்த Anatomy of an illness என்ற இந்நூல் பலகோடிப் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அதன் பின்னர் என்டோர்பினின் செயல்பாடுகள் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன. இவ்வகை ஹோர்மோன் உடலை அமைதிப்படுத்தும் குணம் கொண்டது என்ற முடிவு கண்டறியப்பட்டது.

சந்தோசமாய் இருப்பவர்களுக்கு நோய் ஏற்படுவது அரிதாகும் என்ற உண்மையையே இது மருத்துவ உலகிற்குச் சொன்னது. அதிகம் சிரித்துக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் நோய்த் தாக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணம் என்டோர்பின் எனும் ஹோர்மோன் அதிகம் சுரப்பதே.

தொழுகை போன்ற ஆன்மீக வணக்கத்தின் போது ஏற்படும் பரவச நிலையிலும் இந்த ஹோர்மோன் சுரக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால்தான் எம் முன்னோர்கள் வாய்விட்டுச் சிரியுங்கள் நோய்விட்டுப் போகும் என்று கூறியிருக்கிறார்கள் போலும்.

About the author

Administrator

Leave a Comment