உலக செய்திகள் சர்வதேசம்

இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா

Written by Administrator

பூகோள கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. சுமார் 500,000 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 20,000 பேர் நாளாந்தம் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக உலக சுகாதார அமையம் கூறுகின்றது.

கடந்த வாரம் ஒரே நாளில் 2000 மரணங்கள் சம்பவித்த இந்தியாவில் இதுவரை 16,000 பேர் இறந்துள்ளனர். அஸாம் மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதனால் அங்கே இரண்டு வார கால ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்தியா முழுவதும் ரயில் சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையை நோக்கும்போது எதிர்காலத்தில் நிகழப் போகும் மரணங்களின் தொகையும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகின்றது. இதற்கிடையில் இந்தியா பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறுகின்றது. விவசாயிகள் மற்றும் கீழ்த் தட்டு மக்கள் மில்லியன் கணக்கானோர் ஏற்கனவே கொரோனா தொற்றின் விளைவுகளை அனுபவித்து வருவதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதுவரை 97 இலட்சம் மக்கள் உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 49 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதோடு, சுமார் 5 இலட்சம் பேர் இறந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவிக்கின்றது.

About the author

Administrator

Leave a Comment