உலக செய்திகள் சர்வதேசம்

ஸ்பெய்ன் 2 இலட்சம் பேரை முடக்கி வைத்துள்ளது

Written by Administrator

ஸ்பெய்னின் கடலோமியா எனப்படும் பிராந்தியத்தில் 2 இலட்சம் பேரை ஸ்பெய்ன் அரசாங்கம் தனிமைப்படுத்தலுக்குள் முடக்கி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக ஸ்பெய்ன் விளங்குகின்றது. அங்கு நாளாந்தம் இறப்பவர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பினும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 15 இலட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உணவகங்கள், மதுபானத் தோரணைகள், உடற் பயிற்சி நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டுள்ளதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவக் கூடிய ஆபத்து எழுந்துள்ளது.

இதுவரை பாதிப்பின் முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில் 130,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

About the author

Administrator

Leave a Comment