முதலாவது தேர்தல் வன்முறை அக்கரைப்பற்றில். வன்முறைக் களமாக திகாமடுல்ல

11

கிழக்கு மாகாணத்தின் திகாமடுல்ல மாவட்டத்தின் சில பிரதேசங்கள் தேர்தல் வன்முறைக்களமாக முடியும் என தேர்தல் கண்காணிப்பு நிலையமான கபே அறிவித்துள்ளது.

பொத்துவில், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களையும் இவ்வாறு அடையாளப்படுத்த முடியும் என கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். இங்கு வன்முறைகளைக் குறைப்பதற்காக மேலதிக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏராளமான வெறுப்புப் பேச்சுக்களும் சில வன்முறைகளும் இங்கு பதிவாகியுள்ளன. முதலாவது தேர்தல் வன்முறை அக்கரைப்பற்றிலேயே பதிவாகியுள்ளது. அங்கு ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் தவம் பயணம் செய்த வாகனம் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.