அரச நிறுவனங்களில் பிரச்சாரம் தடை

13

அரச அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் பிரச்சாரம் செய்வதையும் துண்டுப் பிரசுரம் வெளியிடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையகம் அரசியல்வாதிகளையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் கேட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளர் சார்பாகவும் எந்த அரசாங்க மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை அலுவலகங்களிலும், அரச பாடசாலைகளிலும், அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளுக்குச் சொந்தமான எந்த அலுவலகங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வது, பிரசுரங்கள் விநியோகிப்பது, கூட்டங்கள் நடத்துவது அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. இது தாபனக் கோவைக்கும் முரணானது. தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் முரணானது என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.