உள்நாட்டு செய்திகள்

கந்தகாடுவில் 56 பேருடன் புதிய கொத்தணி

Written by Administrator

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்று (9) 56 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து புதிய கொத்தணியொன்று உருவாகியுள்ளது.

ஏற்கனவே கடற்படையினரால் உருவாகிய கொத்தணி 910 பேர் வரை அதிகரித்திருந்தது. வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களால் அடுத்த கொத்தணி உருவாகியிருந்தது.

கந்தகாடு போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் 450 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 56 பேருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது இனம் காணப்பட்டுள்ளது.  

கந்தகாடு நிலையத்தில் மூன்று மாதங்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதற்காகத் தங்கியிருந்த ஒருவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இனம் காணப்பட்டது. அதையடுத்து கந்தகாடு முகாமில் போதனா ஆசிரியராகப் பணிபுரிந்த பெண்மணியொருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து கந்தகாடு முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே 56 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.   

About the author

Administrator

Leave a Comment