ஆசிரியர்களின் கடமை நேரம் 27 முதல் வரையறுப்பு

31

கொவிட் 19 க்குப் பின்னர் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமுகமளிக்க வேண்டியதன் ஒழுங்குகள் பற்றி கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிப்பதற்கான இரண்டாம் கட்டமான ஜூலை 06 முதல் 17 வரையும் மூன்றாம் கட்டமான ஜூலை 20 முதல் 27 வரையும் பாடசாலையில் ஒன்று கூடியிருப்பவர்களைக் குறைக்கும் வகையில் ஆசிரியர்கள் தமக்கு நேரசூசி வழங்கப்பட்டுள்ள காலங்களில் மட்டுமே பாடசாலையில் இருக்க முடியும். ஏனைய உத்தியோகத்தர்கள் தமககு வழங்கப்பட்டுள்ள பணிக்காக மட்டும் பாடசாலையில் இருக்க முடியும். நேரசூசி வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் காலை 7.30 க்கு பாடசாலைக்குச் சமுகமளிக்க வேண்டும் என்பதோடு தமது பணி முடிந்த பின்னர் அவர்கள் சென்று விட வேண்டும்.

எந்த நேரசூசியும் வழங்கப்படாமல் இருக்கின்ற ஆசிரியர்களையும் எந்தப் பணியும் வழங்கப்படாத உத்தியோகத்தர்களையும் பாடசாலைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

27 ஆம் திகதி நான்காம் கட்டம் ஆரம்பித்ததில் இருந்து சகல ஆசிரியர்களும் காலை 7.30 க்கு பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும். அவர்கள் 1.30 க்கு பாடசாலை விட்டுச் செல்வார்கள். 3.30 மணிவரை நேரசூசி வழங்கப்பட்டுள்ளவர்கள் தமது கடமை நேரம் முடிந்த பின்னர் வெளியேறிச் செல்வார்கள்.

27 ஆம் திகதிக்குப் பின்னர் வழமை போல வரவுப் பதிவேட்டில் (பொது 18) சகலரும் கையெழுத்திட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.