மூன்று வாரத்தில் 12 இலங்கையர் மத்திய கிழக்கில் கொரோனாவால் மரணம்.

24

கடந்த மூன்று வாரத்தில் 12 இலங்கையர் மத்திய கிழக்கில் கொரோனாவால் மரணித்துள்ளதாக அந்நாடுகளின் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜூன் 19 ஆம் திகதியாகும் போது கொரோனாவினால் மத்திய கிழக்கில் மரணித்த இலங்கையரின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஓமான் மற்றும் லெபனான் நாடுகளிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்த 35 மரணங்களில் இருவர் பெண்களாவர். இலங்கையிலிருக்கும் அவர்களின் உறவினர்களின் அனுமதியோடு அவர்கள் அந்தந்த நாடுகளிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.