மின்பாவனை அதிகரித்துள்ளதால் 90 ஐ 120 ஆக அதிகரிக்கக் கோரிக்கை

9

கொரோனா காலப்பிரிவில் மக்கள் வீடுகளில் இருந்ததால் மின்பாவனை அதிகரித்துள்ளதாக மின்சக்தி எரிபொருள் அமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் 90 க்கும் குறைவான அலகு மின்சாரம் பாவித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் நிவாரணம் வழங்கியுள்ள நிலையில் இந்த நிவாரணத்தை 120 அலகுகள் வரை பாவித்தவர்களுக்கும் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

90 அலகுக்குக் கீழ் வழங்கப்பட்டுள்ள 25 வீதம் சலுகையை 120 அலகுவரை அதிகரிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராயுமாறு அமைச்சரவை மீண்டும் மின்சக்தி எரிபொருள் அமைச்சரிடம் வேண்டியிருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுவரை குறித்த தொகைக்கு வட்டி அறவிடப்பட மாட்டாது எனவும், மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.