ரிஷாத் என்ன கொண்டு வந்தார் என்பது இப்போது தான் புரிகிறது

9

முஸ்லிம் சமூகத்தை விற்றுப் பிழைத்தவர்கள் என்னுடைய அரசாங்கத்திலும் இருந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடும் மாவட்டமான குருநாகலில் முஸ்லிம் வியாபாரிகளையும் நிபுணர்களையும் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

என்னுடைய அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் 28 முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். எனக்குத் தமிழ் தெரியாது. நான் எங்கு சென்றாலும் ரிஷாதை என்னுடன் அழைத்துச் செலவேன். திரும்பி வரும் போது அவர் பெரிய பொதிகளுடன் தான் வருவார். அதிலே என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதில் இருந்தவைகள் எங்களுக்கு இப்போது நன்றாகத் தெரிகிறது எனவும் பிரதமர் அங்கு கூறினார்.