Features அரசியல்

கொவிட் 19 கட்டுப்பாடு: இலங்கை கற்றுத் தரும் பாடம்

Written by Administrator

இந்தியாவின் சிறிய தெற்கு அயலவர் கொவிட் எண்ணிக்கையை மிகவும் குறைந்த அளவில் பேணியிருக்கிறது. 11 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இலங்கை இதனை எப்படிச் சாத்தியமாக்கியது ? அந்த நாட்டின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இலங்கை ஊன்றிக் கவனித்த இடங்களையும் எடுத்து வைத்த அடிகளையும் விளக்குகிறார்.

முன்னர் தளர்த்தப்பட்டு பின்னர் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டும் அமுல்படுத்தப்பட்ட முடங்கல் நிலையிலிருந்து ஜூன் 28 இல் இலங்கை வெளியே வந்தது. கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாடு கண்ட வெற்றி அரசாங்கத்துக்கு ஆகஸ்ட் 01 முதல் விமான நிலையத்தைத் திறப்பதில் கவனம் செலுத்தச் செய்தது. பன்டமிக் காரணமாக தள்ளிப் போடப்பட்டிருந்த ஏப்ரலின் பொதுத் தேர்தலை ஆகஸ்ட் 05 இல் நடத்துவதற்கு திகதி குறிக்கச் செய்தது.

இரண்டு நகர்வுகளுமே அபாயம் அற்றவை. பெரும்பாலான கொவிட் 19 தொற்றாளர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்களாகவே காணப்படுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு சுகாதார சேவைகளின் உயர் அதிகாரிகள் வழங்கிய செவ்வியில் நடைமுறைப்படுத்திய நெறிமுறைகளில் அவர்கள் திருப்தி கண்டதோடு இந்தப் பாதுகாப்பு விழாது என்றும் உறுதிப்படுத்தினர்.

நூறு வீதம் பாதுகாப்பினை எம்மால் அடைய முடியாது. ஆனால் நூறு வீதத்தை அடையும் வகையிலான கருவிகளை நாங்கள் பாவிக்கப் போகிறோம். இதனால் எந்த இடையூறையும் எந்தக் கசிவையும் எம்மால் துரத்திப் பிடித்து முகாமை செய்து கொள்ள முடியும் என டொக்டர் ஜாசிங்க கூறினார். ஆனால் இது வெற்றியல்ல, கொரோனாவுக்கு எதிராக யாரும் இதுவரை வெற்றியை அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் விமான நிலையம் திறக்கப்பட்டாலும் மாத இறுதியிலேயே சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனாலும் வெள்ளமாகப் படையெடுத்து வரமாட்டார்கள் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். பன்டமிக்குக்கு முன்னர் ஒருநாளில் 10 விமானங்கள், 6000 முதல் 10,000 வரை பயணிகள் என்றிருந்த நிலை மாறி இப்பொழுது சிறியதொரு எண்ணிக்கையினரேயே எதிர்பார்க்கிறார்கள்.

“சுற்றுலாத்துறையில் பல பங்காளிகள் இருக்கிறார்கள். நான் அவர்களைச் சந்தித்தேன். எப்படி சுற்றுலாப் பயணிகளை வரவேற்பது, நாட்டுக்குள் அவர்கள் எப்படிச் சஞ்சரிப்பது, எப்படி அவர்களை வழியனுப்புவது என்பது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே நெறிமுறைகளை வகுத்துள்ளோம்“ என டொக்டர் அனில் ஜாசிங்க இந்தியன் எக்ஸ்பிரஸுக்குத் தெரிவித்தார்.

இறங்கி வருகின்ற ஒவ்வொரு பயணியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் பயண ஆரம்பத்தில் பரிசோதனை செய்திருந்தாலும் பரவாயில்லை. அவர்களது சுற்றுலாவின் ஐந்தாம் ஏழாம் நாட்களில் மீண்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதிகளைச் சுமப்பவர்களும் தனியாளாக வரும் பயணிகளும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுவினரே அனுமதிக்கப்படுவார்கள். உள்ளுர் பயண முகவர் மூலமாக ஏற்கனவே முன்பதிவு செய்து முற்பணமும் செலுத்திய குடும்பங்கள் அங்கத்தவர் குறைவாக இருந்தாலும் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகளின் சுற்றுலாவுக்கான காலம் ஆறேழு நாட்களாவது இருக்க வேண்டும்.

சுகாதார அதிகாரிகள் அவர்கள் தங்கும் காலத்தில் அவர்களை பின்தொடர்வார்கள். ஐந்தாவது ஏழாவது நாட்களுக்கிடையில் (இரண்டாவது) பிசிஆர் பரிசீலனையை செய்வார்கள். இந்த அறிக்கை இல்லாமல் அவர்களால் நாட்டை விட்டுச் செல்ல முடியாது எனக் கூறும் டொக்டர் ஜாசிங்க, சுற்றுலாப் பயணிகள் ஓரிரு நாட்கள் மட்டும் இங்கு தங்கியிருந்து நாட்டுக்குள் வைரஸைப் பரப்பி விட்டுச் செல்ல நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்கிறார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடனும் வாக்குச் சாவடிகளில் சமூக இடைவெளி பேணுவதற்கான நெறிமுறைகள் எட்டப்பட்டிருக்கின்றன. முதன் முறையாக வாக்குகள் எண்ணும் பணி அதேநாளில் ஆரம்பிக்கப்படுவதில்லை.

முன்னமே தொடங்குதல், கடுமையாகப் பின்தொடர்தல்

முன்னாயத்தங்களாலேயே எமக்கு கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்த முடிந்தது. நாமாக உஷ்ணப் பரிசோதனை செய்வதும் தாமாக முன்வந்து அறிவிப்பதும் ஜனவரி நடுப்பகுதியிலேயே தொடங்கிவிட்டது. முதலாவது பிசிஆர் ஆய்வுகூடம் சீன சுற்றுலாப் பயணிகளுடன் வந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது அடையாளம் காணப்படுவதற்கு முதல் நாளாகிய ஜனவரி 26 இலேயே இயங்கத் துவங்கியிருந்தது.

அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூலமாக யாருக்கும் தொற்றுப் பரவவில்லை. இத்தாலிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாகவிருந்த ஒருவர் மூலமே முதலாவது இலங்கையர் கொரோனா தொற்றுக்குள்ளானார். முதலாவது கொவிட் மரணம் மார்ச் 29 இல் நிகழ்ந்தது.

படிப்படியாக கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிக்கத் துவங்கியதும், பெரும்பான்மையான வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பியவர்களால், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நாட்டை முடக்கத் தீர்மானித்து மார்ச் 29 முதல் ஊரடங்குச் சட்டத்தையும் அறிவித்து விட்டார். அது மே 11 வரை 52 நாட்களுக்குத் தொடர்ந்தது. அப்போது 850 தொற்றாளர்கள் நாட்டில் காணப்பட்டனர்.

கடற்படை முகாமில் ஒரு கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 23 இலிருந்து அது 4000 பேர் வரையான எண்ணிக்கையினரை தனிமைப்படுத்தச் செய்தது. கடற்படைக் கொத்தணி 910 வரை உயர்ந்து சென்றது. இதுவும் வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பியவர்கள் மூலமும் தான் எண்ணிக்கை குவியத் தொடங்கியது.

புவியியல் ரீதியாக மூன்று அல்லது நான்கு மாவட்டங்களே கொதிநிலையில் காணப்பட்டன. கடற்பிரதேச புத்தளம், மேற்கில் கொழும்பு, கொழும்பை அண்டிய கம்பஹா, களுத்துறை பிரதேசங்களே அவை. தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வட மாகாணத்தில் தொற்றாளர்களை அதிகமாகக் காண முடியவில்லை.

ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே நாங்கள் அவரைச் சுற்றியுள்ள புள்ளிகளை இணைத்துப் பின்தொடர்ந்தோம். தேவையற்ற விதத்தில் வைரஸ் பரவுவதற்கு நாங்கள் விடவில்லை எனக் கூறுகிறார் சுகாதார சேவைப் பணிப்பாளர்.  சில தொற்றாளர்களது 60-70 தொடர்பாளர்கள் பின்தொடரப்பட்டிருக்கின்றனர். எண்ணிக்கை நிலப்பரப்பைப் பொறுத்தே அமைகிறது. சேரிப்புறங்களின் அடர்த்தியான இடங்களே அதிகளவான தொடர்பாளர்களைக் கொண்டிருந்தன. ஆனால் கிராமங்களில் அது குறைவாக இருந்தது. வெளிநாட்டில் உள்ளவர்களும் தனது மூத்த பிரஜைகளும் குறிப்பாகப் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை இலங்கை அறிந்தே வைத்திருந்தது.

“கொத்தணிகளை கொத்தணிகளாகவே வைத்திருந்தோம். அவை சமூகப் பரவலாக மாறுவதற்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை. அனைத்து நோயாளர்களையும் அவர்களது தொடர்புகளையும் அறியக் கூடியதொரு சூழ்நிலையை நாங்கள் கட்டமைத்தோம். அதனூடாக எமக்கு முகாமை செய்ய முடியுமாக இருந்தது. சமூகப் பரவலே எம்மிடமில்லை. அதற்கு நாங்கள் இடமளிக்கவுமில்லை. தொடர்புகளைக் கடுமையாகப் பின்தொடர்வது, கடுமையான தனிமைப்படுத்தல் செயற்பாடு இவைகள் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்ட இடங்கள் என்கிறார் டொக்டர் அனில் ஜாசிங்க.

கொவிட் 19 போராட்டத்தில் இராணுவத்தின் பாத்திரம் விமர்சனத்துக்குள்ளானது. அது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் படைப்பாகவும் அவரது அரசியல் அஸ்திரமாகவும் பார்க்கப்பட்டது. இது போன்ற வேளைகளில் இராணுவத்தைப் பயன்படுத்தியது தப்பில்லை என்கிறார் டொக்டர் ஜாசிங்க. நாங்கள் நினைத்த மாத்திரத்தில் எம்மால் தனிமைப்படுத்தல் முகாம்களை நிறுவ முடியாது. ஆனால் இராணுவத்தினர் செய்தார்கள். அவர்களுக்கு ஒரு கட்டடத்தைக் கொடுத்தால் போதும். அவர்கள் அதனை ஒரு முகாமாக மாற்றிவிடுவார்கள் என்கிறார் அவர்.

50 தனிமைப்படுத்தல் முகாம்களை இராணுவத்தினர் நிறுவியிருக்கிறார்கள். 14 நாட்களுக்கு செலவழிக்க முடியுமானவர்களுக்கு சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல ஹோட்டல்கள் தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன.

சன அடர்த்தியான சேரிப்புறங்களில் நாங்கள் மரங்களை வேரோடு பிடுங்கி பிறிதொரிடத்தில் நாட்டுகின்ற பொறிமுறையை (Root Ball Mechanism) தனிமைப்படுத்தலுக்காகப் பயன்படுத்தினோம். அங்கிருந்த அனைவரையும் பிறிதோரிடத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைத்தோம் – டொக்டர் அனில் ஜாசிங்க.

100 ஐசியு கட்டில்களுடன் டொக்டர் ஜாசிங்கவின் அணி தயாராகவிருந்தது. ஆனால் 10 கட்டில்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு கட்டில் மாத்திரமே பயன்பாட்டில் உள்ளதாக கொவிட் காட்சிப்பலகை எடுத்துக் காட்டுகிறது.

ஏற்கனவே இருந்த ஆரம்பச் சுகாதாரப் பராமரிப்பை கட்டியெழுப்புதல்

அரசினால் இலவசமாக வழங்கப்படுகின்ற சர்வதேச தரத்திலான சுகாதாரப் பராமரிப்பு முறையை உள்ளடக்கிய இலங்கையின் வலுவான சுகாதாரக் கட்டமைப்பினை டொக்டர் ஜாசிங்க புகழ்ந்தார். இதனூடாகத் தான் மலேரியாவுக்கு எதிராகப் போராடி 2016 இல் வெற்றியையும் அறிவிக்க முடிந்தது என்கிறார் அவர். இலங்கையின் பொதுச் சுகாதார முறை பிரமிட் வடிவிலான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மாவட்ட தேசிய வைத்தியசாலைகள் அனைத்தும் இந்த நெட்வேர்க்கில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இருக்கின்ற ஒன்றைத் தான் கட்டியெழுப்ப வேண்டும். எமது பொதுச் சுகாதார முறையே எமது பலம். நாடு அபிவிருத்தி அடையும் போது, குறிப்பாக மேற்கில், அவர்கள் தமது பொதுச் சுகாதார முறையில் இருந்து இலகுவாக வெளியில் வந்து விடுவார்கள். ஆனால் எம்மிடம் முழுமையாகப் பரிணமித்த பொதுச் சுகாதார முறை இருக்கிறது. எம்மிடம் சுகாதார மருத்துவப் பரிசோதகர்கள் இருக்கிறார்கள், பொதுச் சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் போல் இன்னும் பலர் நாடு முழுவதும் இருக்கிறார்கள். பராமரிப்பதற்கும் அதிகாரம் செலுத்துவதற்கும் தெளிவான நிலைகள் எம்மிடம் இருக்கின்றன. வடிவாகப் பின்னப்பட்ட வைத்தியசாலை முறையும் மருத்துவப் பராமரிப்பு முறையும் எங்களிடம் இருக்கின்றன. நல்ல வைத்தியர்கள் சாதாரணமாகவே கிடைப்பார்கள். அரச துறையில் சிறந்த மருத்துவப் பராமரிப்புக் கிடைக்கும். ஒவ்வொரு 1.5 கிலோ மீட்டரிலும் ஒரு அரச சுகாதார நிலையத்தை காணலாம் என்றார் டொக்டர்  ஜாசிங்க.

கொவிட் நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயினை மட்டுமே நாங்கள் கொடுத்தோம் எனவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான இலங்கையின் வியூகம்

இலங்கை 104,272 பிசிஆர் பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக 2089 பரிசோதனைகளை ஜூன் 03 இல் நடத்தியிருக்கிறது. இதற்கு மேலும் செய்யக் கூடிய திறன் அரசாங்கத்துக்கு இருக்கிறது, ஒரு நாளைக்கு 500 பரிசோதனைகளைச் செய்வதற்கான புதிய வசதியையும் நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். விமான நிலையம் திறக்கப்பட்டால் அதிகமான பரிசோதனைகள் செய்ய வேண்டி வரும். தனியார் துறை ஆய்வு கூடங்களும் இதில் பிணைக்கப்பட்டிருக்கிறது என டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிடுகிறார்.

பரிசோதனைகள் சனத்தொகையில் 0.5 வீதமளவுக்கு குறைவாகவே செய்யப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட குழுக்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே எழுந்தமாறாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என டொக்டர் ஜாசிங்க எடுத்துக் கூறினார்.

சமூகப் பரவலாக இருந்திருந்தால் அதிக பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்திருக்கும். இது போதாமலிருந்திருக்கும். மும்பாயில் இது தான் நடக்கிறது. நாங்கள் இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட சிலரையே பரிசோதனை செய்தோம். ஆரம்பத்திலிருந்தே நாட்டின் சில வைத்தியசாலைகளை நாம் தெரிவு செய்து கொண்டோம். இந்த ஒவ்வொரு வைத்தியசாலையிலும் எமக்கு தனிமைப்படுத்தல் நிலையங்கள் இருந்தன. காய்ச்சலுடனும் சுவாச நோயுடனும் வருபவர்கள் இதில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது passive surveillance என அழைக்கப்பட்டது.

பின்னர் நாங்கள் வெளிநோயாளர் பிரிவில் எழுமாறான பிசிஆர் பரிசோதனைகள் செய்தோம். பின்னர் நாங்கள் மீன் சந்தை, முச்சக்கர வண்டிச் சாரதிகள், சேரிகள் என சமூகக் கட்டமைப்புக்களில் செய்தோம். இவை மொத்தமாகவே எழுமாறான பரிசோதனைகள் என அவர் சொன்ன போது, இந்த அதி உயர் அபாயமுள்ள தொகுதிகளில் நேர்மறை வீதம் 2 வீதத்துக்கும் குறைவாக இருந்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, எங்களிடம் சமூகப் பரவல் இல்லை என்பதுவே அதன் பொருள், அதனால் நகரத்துக்குப் போய் அனைவரிடமும் சளியைப் பெற்றெடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்கவில்லை என்றார் அவர்.

சீனாவின் பாரிய இரு திட்டங்களான போர்ட் சிடி மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் காரணமாக அதிகமான சீனர்கள் இலங்கைக்கு வருகிறார்கள். ஆனால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனப் பெண்ணைத் தவிர வேறு சீனர்கள் எவரும் கொவிட் 19 தொற்றாளர்களாக இதுவரை இனம் காணப்படவில்லை. மார்ச் மூன்றாம் வாரம் அளவில் விமான நிலையத்தை மூட முன்னரேயே சீனர்களுக்கு வருகை விசா வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது.

ஏற்கனவே நாட்டில் இருந்த சீனர்கள் எமக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. சீனாவிலிருந்து வருபவர்களே எமக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். ஆனாலும் இது எமக்குப் பிரச்சினையாக அமையவில்லை. ஏனெனில் சீனர்கள் இயல்பிலேயே நெறிமுறைகளைப் பேணி நடப்பவர்கள். சீன அதிகாரிகள் எமது ஒழுங்குகளுடன் இணக்கமாக நடந்து கொண்டார்கள். அதில் அவர்கள் எங்களை விட முன்னணியில் இருந்தார்கள். தமது பணிக்கட்டமைப்புக்கு வெளியில் தமது பணியாளர்களை அவர்கள் செல்ல விடவில்லை என டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

About the author

Administrator

Leave a Comment